குரு பகவான் இப்போது தைரிஸ்தானமான சிம்மத்திற்கு வருகிறார்.
இதனால் உங்கள் களத்திர, பாக்ய, லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பதால் குரு பகவன்
சற்று சிக்கலைத் தருவார். இருந்தாலும் கைவிடமாட்டார்.
களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவன் – மனைவி இடையே
புரிதல் உண்டாகும். இல்லறம் இனிக்கும். பிரிந்த தம்பதியர் சேருவார்கள். திருமண
வயதில் உள்ளவர்களுக்கு திருமண யோகம் கிட்டும். ஆடை, ஆபரணங்கள், ஆடம்பர பொருள்
சேர்க்கை உண்டு. உங்களுக்கு நண்பர்கள், கூட்டாளிகள் விட்டுகொடுப்பார்கள்.
சில காரியம் தடைபடும், தைரிய குறைவு உண்டாகும், வீண்
அலைச்சல் உண்டாகலாம். உறவுகளுடன் கருத்துவேறுபாடு உண்டாகும். உடல் நலனில் கவன
தேவை.
பல விசயங்களில் தொட்டது துலங்கும். செல்வாக்கு கூடும்.
பணப்புழக்கம் அதிகமாகும். தங்கம், நிலத்தில் முதலீடு செய்யலாம். புதிய தொழில்
தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். பங்காளிகள் மற்றும் பணியாட்கள் ஆதரவு கிடைக்கும்.
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் பெரிதாகும்.
வேலையில் உள்ளவர்களுக்கு காத்திருந்த பனி உயர்வு, ஊதிய
உயர்வு கிடைக்கும். சிலருக்கு தொழில் மாற்றம் வேலை மாற்றம் ஏற்படலாம். சில வகையில்
உபரி வருமானம் கிடைக்கும். புது தைரியம் வரும்.
உங்கள் தந்தையால் மகிழ்ச்சி, உதவிகள், பொன், பொருள்
சேர்க்கை உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி
போன்ற நற்பலன்கள் கிட்டும்.
No comments:
Post a Comment