இந்த குரு பெயர்சியானது தங்கள் தன, குடும்ப மற்றும் வாக்கு
ஸ்தானத்திற்கு மாறுவது மிகவும் நல்லது. “இரண்டிலே குருதான் பார்த்தால் இல்லத்தில்
மகிழ்ச்சி கூடும். எட்டினை குரு பார்த்தால் நோய் மறைந்து போகும், பத்தினை குரு
பார்த்தால் தரணியெங்கும் தொழில் வளம் பெருகும்” என்று ஜோதிடம் சொல்கிறது.
உங்கள் கடன் சுமை குறையும். மறைமுக சேமிப்புகள்,
வருமானங்கள் பெருகும். வீடு, வாகனம், நிலம் போன்றவற்றில் மாற்றம் செய்வீர்கள்
திருமணம் கைகூடும். குடும்பத் தேவை நிறைவேறும். கணவன் – மனைவி இடையே காதல் அதிகரிக்கும்,
குழந்தை பாக்கியம் கிட்டும். நண்பர்கள் உதவி செய்வார்கள். தேக ஆரோக்கியம் கூடும்,
வியாதிகள் நீங்கும்.
வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சி, லாபம் பெறுவர்
. தனவரவு பெருகும், பேரும் புகழும் உண்டாகும். மரியாதை, பொறுப்புகள் தேடி வரும்.
தொழில் துறையில் உதவி கிடைக்கும்.
வேலையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு, கவுரவ பதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை அல்லது
வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பு வரும்.
கொடுக்கல் வாங்களில் நின்று போன பணம் கை வந்து சேரும். கடன்
கரையும். வழக்கு வெற்றி, அலைச்சல் குறைவு போன்ற நற்பலன்கள் கிட்டும். தந்தை உடல்
நலம் சிறாகும், மருத்துவ செலவு குறையும். தந்தைவழி உதவி கிடைக்கும்.
No comments:
Post a Comment