Wednesday, 10 June 2015

குரு பெயர்ச்சி சிம்மம் 2015 – 2016

இந்த குருப்பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் இராசியிலேயே அமரப்போகிறார் அதாவது ஜென்மகுரு என்ற நிலை. பயமேவேண்டாம் நன்மையே செய்வார். உங்கள் மனம் ஆன்மீகத்தில் திரும்பும். கோயில் குலம் என்று வளம் வருவீர்கள்.

உங்கள் ஜென்மத்தில் உச்சம்பெற்ற குருவின் பார்வை பதியும் யோகமான ஸ்தானங்களின் வழியாக நற்பலன்கள் கிடைக்கும். உங்களின் கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் அறிவாற்றல் சாமர்த்தியம் நன்றாக வெளிப்படும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்.

உங்கள் குடும்பத்தின் பணத்தேவை அதிகரிக்கும், கையிருப்பு கரையும் கடன் வாங்க நேரிடும். வீடு, வாகன செலவு அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த தம்புதி சேருவார்கள், திருமணத்தடை விலகும். புதுமணத் தம்பதிகளுக்கு வாரிசு கிடைக்கும்.

பூர்வீக சொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்துப் போராட நிர்பந்தம் வரும். தடைப்பட்டிருந்த திருமணம், கல்வி போன்றவை நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.

தொழிலில் நிதானம் தேவை, கடின உழைப்பு தேவை. எதிரிகள் விலகுவர், காரியம் வெற்றி பெரும். பொதுவாழ்வில் புதிய பதிவிகள் தேடிவரும்.


வேலையில் உள்ளவர்கள் தாமத நிலையை சந்திப்பார்கள், ஆனாலும் வருமானம் உயரும், புதிய பதவி, இடமாற்றம் தேடிவரும்.

No comments:

Post a Comment