சனிப்பெயர்ச்சி 2014 – 2017 கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு சனி பகவான் மூன்றாம்
இடத்தில் சஞ்சாரம் செய்து நல்ல பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட
காலத்தில் ஏறக்குறைய பின்வரும் நற்பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அஷ்டலட்சுமி அருள் பொழியும் காலம்,
அனைத்து செயல்களும் வெற்றிபெறும் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம்
அதிகரிக்கும், தொழில் சிறப்படையும் பதவி உயர்வு மற்றும்
தலைமை பதவி கிடைக்கும் எல்லாமே நன்மையாக நடைபெறும், ராஜ
யோகம் உண்டாகும், உயர் ரக வாகன யோகம் உண்டாகும்.
உடன் பிறப்புக்கும் அதிர்ஷ்டம் உண்டாகும், நண்பர்களின் அனைத்து
விஷயங்களிலும் துணையாக நிற்பார்கள், திறன் மிக்க பணியாட்கள்
அமைவார்கள், அழகான வசதியான பெரிய வீடு அமையும். ஜாதகர் பயந்த
சுபாவம் உள்ளவராக இருப்பினும் இந்த காலகட்டத்தில் தைரியம் வீரம் மிக்கவராக மாறி
எதிரிகளை எல்லாம் பந்தாடிவிடுவீர்கள். கால்நடைகள் சேர்க்கை உண்டாகும். எல்லா
வகையிலும் நல்ல பலன்களே நடக்கும். லாபஸ்தானத்தில் நிற்கும் குரு சனி தரக்கூடிய சுப
பலனை மேலும் விருத்தி செய்வார்.
கன்னி ராசிக்கான 2015 ஆண்டு
பலன்கள்
No comments:
Post a Comment