சனிப்பெயர்ச்சி 2014 – 2017 துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான் ஏழரை
சனியின் கடைசி இரண்டரை வருஷ காலமாகும் பாத சனி-குடும்ப சனியாக செயல்பட்டு பலன்களை
வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை
தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. குடும்பத்தில் மனைவி மக்களுக்கு புதிதாக
நோய் தோன்றலாம் அதனால் அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் குடும்ப
உறுப்பினர்களால் தேவையற்ற செலவும் நஷ்டமும் உண்டாகும். வேலையாட்கள் அவர்களுடைய
பணியை சரியாக செய்ய மாட்டர்கள்.
அவமானம் ஏற்படும், வீட்டை விட்டு கட்டாயமாக வெளியேறி கண்ட
இடங்களுக்கு அலையும் நிலை வரும், பெரியோர்களின் கோபத்திற்கு
ஆளாக வேண்டி வரும், கண்ணில் பாதிப்பு உண்டாகும் கண் பார்வை
குறையும், அதிக செலவின் காரணமாக சொத்துக்கள் விற்க வேண்டி
வரும், ஆரோக்கியம் கெடும் உடல் வலிமை முக வசீகரம் குறையும்
சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நிலையும் வரலாம்.
தீய வழிகளில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் வரும், வேலையை விட்டு விலகும்
சூழ்நிலையும் உண்டாகும் நிர்பந்தப்படுத்தி இடமாற்றம் செய்யப்படுவீர்கள், மனதில் குழப்பமும் உறவினர்களுடன் பகைமையும் உண்டாகும், அவசர தேவைக்காக கடன் வாங்கினாலும் அது வீண் விரயமாகும். தேவையில்லாத பயம்
உண்டாகும், கடுமையாக உழைக்கத் தயங்காதீர்கள், ஒரு செலவு செய்வதற்க்கு முன் இது தேவையா என யோசித்து செயல்பட்டால் சனி
பகவானின் கருணை கிடைக்கும். மேலும் உச்சம் பெற்ற குரு சனியை பார்ப்பதால்
குடும்பத்தில் சுபம் நடக்கும் தீய பலன்கள் குறையும்.
துலாம் ராசிக்கான 2015 ஆண்டு
பலன்கள்
No comments:
Post a Comment