சனிப்பெயர்ச்சி 2014 – 2017 சிம்மம்
சிம்மம் ராசி அன்பர்களுக்கு சனி பகவான்
அர்த்தாஷ்டம சனியாக செயல்பட்டு பலன்களை வழங்கப்போகிறார். இந்த இரண்டரை வருட
காலத்தில் ஏறக்குறைய பின்வரும் பலன்களை தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அர்த்தாஷ்டம சனி மிகவும் கெட்ட பலனையே தரும் என்றுதான் எல்லாரும் சொல்லுவார்கள், உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய
ஸ்தானாதிபதியான குரு உச்சம் பெற்று சனி பகவானைப் பார்ப்பதால் அர்த்தாஷ்டம சனியின்
தீயபலன்கள் பெரிதும் மட்டுப்படும்.
கொஞ்சம் அரசாங்க கெடுபிடியும் அரசு அதிகாரிகளின்
தொல்லையும் உண்டாகும், வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு நோயின் பாதிப்பு ஏற்படும், சேமிப்புகள் கரையும், சொத்துகள் கைவிட்டு போகும்
அளவுக்கு ஆடம்பர செலவு செய்வீர்கள், கடன் காரணமாக ஊரை விட்டே
வெளியேற வேண்டிய சூழ்நிலையும் வரலாம், உறவினர்கள் அனைவரும்
உங்களை பகையாக நினைப்பார்கள்.
மனம் இனம் தெரியாத துக்கத்தில் உழலும்
தேவையில்லாத பயமும் தயக்கமும் உருவாகும்,
வாதம் தொடர்பான நோய்கள் வந்துவிடும் என்று பயப்படுவீர்கள், நோயால் ஒரு கால் முடமாவதற்கும் வாய்ப்புகள் அதிகம், நாய்
கடிக்கலாம் மாடு முட்டலாம், சுகபோகம் தூக்கம் கெடும்.மனதில்
எதிர்மறை சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கும், மானம் மரியாதை
கௌரவம் அனைத்துமே காப்பாற்றிக் கொள்ளுங்கள், முகம் தெரியாத
பகைவர்களால் தொல்லைகள் உண்டாகும்.
சிம்மம் ராசிக்கான
2015 ஆண்டு
பலன்கள்
No comments:
Post a Comment