6
எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சுக்கிரன் (Venus)
ஒன்பது
எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப்
பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே (விணீtமீக்ஷீவீணீறீ கீஷீக்ஷீறீபீ)
நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில்
அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால்
கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள். இன்பம், பணம், சுகமான
அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்! சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய
முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும்.
மன்மதர்களின்
மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண்
குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும்
அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது
இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும்
பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு
(லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள். இந்த 6ல் எண்காரர்கள்
சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம்
குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி
விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக்
கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பார்கள்.
இவர்கள்
தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப்
பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள்
செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை
புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய
துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில்
இருக்கப் பிடிக்காது! இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போது
முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இவர்களுக்க 5&ம்
எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம் உண்டு.
இவர்கள்
எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே! எனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள்
ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள
வேண்டும். பொதுவாகவே ஒரு வீட்டில் 6& எண் குழந்தைகள்
பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பார்கள்.
மேலும் 6 எண்காரர்கள்,
தங்கள் பிறந்த வீட்டின்
வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவே விளங்குவார்கள். இவர்களின் காம
உணர்ச்சிகள், காதல் ஆகியவை நிலையானவை! ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும்
உடையவை! பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்கு இயற்கையிலேயே
நிறைந்து காணப்படும்.
எப்போதும்
இவர்கள் தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டு உழைப்பதில்
அலட்சியம் காட்டும் குணம் இருக்கும். இதை இவர்கள் மாற்றிக் கொண்டால்தான் ‘விஜயலட்சுமி’ எப்போதும்
இவர்களுடன் இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசிய
ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான், பணம் எப்போதும்
நீங்காமல் இவர்களுடன் இருக்கும். இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன்
வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.
No comments:
Post a Comment