Wednesday, 10 June 2015

குரு பெயர்ச்சி தனுசு 2015 – 2016

குரு பகவன் இப்பொது உங்கள் இராசியில் 9ஆம் இடத்தை பார்க்கிறார். “ஒன்பதில் குருவும் வந்தால் ஒப்பற்ற வாழ்கை சேரும், பொன் பொருள் அதிகரிக்கும், பூமியால் லாபம் கிட்டும், நட்பு கைகொடுக்கும், இன்பத்தின் எல்லை காண இறையருள் கைகொடுக்கும்” என்று ஜோதிடம் சொல்கிறது.

உங்கள் எண்ணங்கள் அனைத்தும் கைகூடும், பணப்பிரச்சினை அகலும். கடன் தீரும். வேலை, தொழிலில் நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெரும். நண்பர்கள் ஆதரவு தருவார்கள்.மாபெரும் பொறுப்புகள், பதவிகள் உங்களுக்கு வந்து சேரும்.

“குரு பார்க்க கோடி நன்மை” என்பதுபோல் உங்களுக்கு நற்பலன்கள் நிறைய நடக்கும். உங்கள் செல்வாக்கு மதிப்பு, மரியாதை உயரும். சகோதரப் பகை அகலும். பாகப்பிரிவினை சுமூகமாக அமையும்.

வழக்குகளில் வெற்றி, வீடு கட்டி குடியேருவீர்கள், வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். உடல்நலம் நன்றாக இருக்கும். தம்பதிகள் ஒற்றுமை காப்பார்கள்.

வேலையில்லாமல் இருந்தால் வேலை கிடைக்கும், மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும், சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள், பதவி உயர்வு, சலுகை கிட்டும். விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் கிட்டும். புது வீடு, வாகனம் யோகம் உண்டு, வெளிநாடு வேலைவாய்ப்பு உண்டு.

வியாபாரம் சாதகமாக இருக்கும். இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தேக்க நிலை மாறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். உங்கள் செல்வாக்கு உயரும்.  

No comments:

Post a Comment