Monday, 1 December 2014

பொய் சொன்னால் கண்டுபிடித்து விடலாம்

(Image belladepaulo)
பொய் பேசும்போது நம்மை அறியாமல் கண்சிமிட்டல் அதிகரிக்கும், குரலில் இருக்கும் மாற்றங்கள், கண்மணி விரிவடைதல் போன்ற தடயங்கள் அடையாளமாக காட்டிகொடுத்துவிடும்.
பொய் சொல்வதில் உள்ள சிக்கல், நமது ஆழ்மனம் தன்னிச்சையாகவும், பொய் வார்த்தைகளுக்கு எதிராகவும் செயல்படுவதால் நமது உடல்மொழி காட்டிக் கொடுத்து விடுகிறது. இதனால் தான் அரிதாக பொய் சொல்பவர்கள் எவ்வளவு நம்பும்படியாக சொன்னாலும் பிடிபட்டு விடுகிறார்கள். அவர்கள் சொல்ல ஆரம்பித்த உடனேயே அவர்களது உடல் முரண்பாடான சைகைகளை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை என்பது தெரிகிறதுவிடும்.
பொய் கூறும்போது அவர்களது ஆழ்மனம் அனுப்பும் நரம்பு சக்தி ஒரு சைகையாக வெளிப்பட்டு வாய் வார்த்தைகளோடு முரண்படுகிறது. அரசியல்வாதிகள், வக்கீல்கள், நடிகர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் போன்ற தொழிலில் உள்ளவர்கள் பொய் பேசும்போது தங்கள் உடல் அசைவுகளை நன்கு பயன்படுத்துவதால் அவர்கள் கூறும் பொய்யைக் கண்டறிவது கடினம்.
புன்னகை
புன்னகை பொய் சொல்வதற்கான அடையாளம் என்று பெரும்பாலானவர்கள் நினைப்பதால், அவர்கள் தாங்கள் பொய் சொல்வதைக் குறைத்து விடுகிறார்கள். ஒரு உண்மையான புன்னகையை விட, பொய்யான புன்னகை வேகமாக வெளிபடுகிறது. நீண்ட நேரம் நீடிக்கிறது. பொய் பேசுபவன் புன்னகைக்கும் போது, முகமுடி அணிந்ததை போல் தோன்றுகிறது. ஒரு பொய்யான புன்னகை முகத்தின் ஒரு பக்கத்தை விட மறுபக்கத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. முளையின் இரண்டு பக்கங்களுமே புன்னகையை உண்மையாக்க முயல்வதால், இப்படி ஏற்படுகிறது. முகபாவங்களை கையாளும் பகுதி முளையின் வலது பக்கத்தில் இருப்பதால், உடலின் இடது பக்கத்திற்கே தகவல்களை அனுப்புகிறது. இதனால் முகத்தின் வலது பக்கத்தை விட இடது பக்கத்தில் தான் பொய்யான உணர்வுகள் அதிகமாக வெளிப்படுகின்றன. உண்மையான முகத்தின் இரண்டு பக்கங்களையும் கட்டுபடுத்துகின்றன. பொய் பேசுபவர்கள் பொதுவாக, சில வெளிப்படையான சைகைகளை வெளிபடுத்து கின்றனர்.
வாயை முடுவது
பொய்யான வார்த்தைகளை அழுத்தி விடும்படி ஆழ்மனம் கட்டளையிடுவதால் வாயை கை முடுகிறது. சில சமயம் சில விரல்கள் அல்லது முஷ்டியால் இறுக்க முடுவதன் முலம் வாயை மறைக்கலாம். ஆனால், அர்த்தம் ஒன்றுதான். இப்படி வாயை முடும் சைகையை மறைக்க சிலர் பொய்யாக இருமுவார்கள். யாராவது பேசும்போது இப்படி செய்தால் அவர்கள் பொய் சொல்லலாம். நீங்கள் பேசும்போது அவர் தன் வாயை முடிக் கொண்டால் நீங்கள் எதையோ மறைப்பதாக அவர் நினைப்பதாக அர்த்தம்.
வாயை முடுவதை உதடுகளின் மேல் சுட்டு விரலை வைத்து `உஷ்என்பது போலும் செய்யலாம். இப்படி செய்பவரின் அம்மாவோ, அப்பாவோ அடிக்கடி இப்படி செய்திருக்கலாம். தான் நினை ப்பதை கூற வேண்டாம் என்று அவர் தனக்குத் தானே கட்டளையிட இப்படி செய்யலாம். உள்ளே மறைத்ததை வெளியே காட்டுவதற்காகவே இப்படி செய்கிறார்கள். உங்கள் பெற்றோரோ அல்லது ஆசிரியரோ நீங்கள் குழந்தையாக இருக்கும் போது இவ்வாறு செய்திருப்பார்கள்.
காலரை இழுப்பது
பொய் கூறுவதால், முகம் மற்றும் கழுத்தின் கீழுள்ள திசுக்களில் குறுகுறுவென்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. அப்போது, தேய்க்கும் போதோ அல்லது சொறியும்போதோ தான் அதைத் திருப்தி செய்ய முடியும். இதனால் தான் நிச்சயமற்ற நிலையில் உள்ளவர்கள் கழுத்தை சொறிவார்கள். இதனால், பொய் சொல்பவர்கள், தங்களை பிறர் கண்டுபிடித்து விட்டார்கள் என்று சந்தேகிக்கும்போது காலரை இழுக்கிறார்கள். ஏமாற்றுவதால், ரத்த அழுத்தம் அதிகமாவது, கழுத்தில் வியர்ப்பது போன்றவற்றின் முலம் அவர் பொய் சொல்வது உங்களுக்கு தெரிந்து விடும்.
காட்டிக் கொடுக்கும் சைகைகள்
பொய் சொல்பவர்கள் தங்கள் முக்கிய உடல் சைகைகளை வேண்டுமென்றே கட்டுபடுத்தி விட்டாலும், பல சிறிய அசைவுகள் அதையும் மீறி வெளிபட்டு விடும். முக தசை சுருக்கம், கண்மணி சுருங்கி விடுதல், வியர்த்தல், கன்னம் சிவத்தல், கண்ணைத் தேய்ப்பது, நிமிடத்திற்கு பத்து முறை கண்சிமிட்டுவது 50 முறை கண்சிமிட்டுவதாக அதிகரிப்பு, முக்கைத் தொடுவது போன்ற சில சிறு சைகைகள் பொய்யை வெளிபடுத்தி விடும். இந்த சிறிய அசைவுகள் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தோன்றி மறையலாம். நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் விற்பனை பிரதிநிதிகள், மிகவும் நுட்பமானவர்களால் மட்டுமே இவற்றை உணரமுடியும். சரி இனிமேல் இந்த யுத்தியை வைத்து பொய்யை கண்டுபிடியுங்கள்.

No comments:

Post a Comment