வெற்றிபெற்றவர்கள் சொல்லாத வார்த்தைகள்
வாழ்க்கையில் வெற்றிகரமாக இருப்பவர்கள் சில வார்த்தைகளை
சொல்லிக்கொண்டே இருப்பார்கள், சில வார்த்தைகளை சொல்லவே மாட்டார்கள். சரி உங்களுக்கு
இன்று வெற்றிகரமான மனிதர்கள் வாயில் இருந்து வரவே வராத வார்த்தைகளை உங்களுக்கு
சொல்கிறேன்.
1.”நம்மால் இது முடியாது”
முடியாததையும் முடித்துக் காட்டினால்தான் நீங்கள் வெற்றிகரமான மனிதராக
மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். முடியுமா என்று யோசித்தால் இப்போது உங்களால் இதை
படிக்கக்கூட முடியாது.
2.”இது எப்படி என்று தெரியவில்லை”
ஆம், இந்த வார்த்தையை பல கோடி மனிதர்கள் தினமும் சொல்லிகொண்டேதான்
இருக்கிறார்கள் அதனால் தங்கள் வாழ்கையில் வந்த சந்தர்பங்களை பயன்படுத்தி சாதிக்க
தவறியபடியே சாதித்தவர்களை அண்ணாந்து மூக்கில் மேல் விரல் வைத்தபடி
யோசித்துக்கொண்டே இருகிறார்கள், இவனுக்கு எப்படி இது தெரிந்தது என்று. எல்லா
விஷயங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
3.”அது என்னவென்றே தெரியவில்லை”
இப்படி சொல்லி எத்தனையோ விஷயங்களைத் தவிர்த்து தப்பிதோம்டா சாமி
இருந்திருப்பீர்கள்? அது அதனையும் நீங்கள் வாழ்கையில் தவறவிட்ட சந்தர்ப்பங்கள்
மறந்துவிடாதீர்கள்.
4.”இது எல்லாமே நானதான் செய்தேன்”
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா தனி ஒரு மனிதனால் எந்த ஒரு வேலையையும்
தனியாகச் செய்யவே முடியாது. சமையல் செய்ய விவசாயியின் அரிசி, பருப்பு என யாரோ
ஒருவருடைய உதவி இல்லாமல் செய்யவே முடியாது.
5.”இதற்கு அவசியமே வரவில்லை”
இப்படி அப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் நினைதுருந்தால் நாம்
இப்போது தொடுதிரை (TouchScreen) சாதனங்களை நம் கையில் வைத்திருக்கமுடியாது. இது
போன்ற ஆரம்ப காலத்து சந்தர்பங்களை தவறவிடாதீர்கள்.
7.”இது மிகவும் தாமதம் வேண்டாம்”
நீங்கள் இரவு உணவை எப்போதும் 9 மணிக்கு உண்பிர்கள், இன்று உங்களால் இரவு
11 மணிக்குதான் சாப்பிட முடியும் என்றால் என்ன செய்வீர்கள்? சாப்பிடாமலே
தூங்குவீர்களா ? இல்லை உங்களால் நிம்மதியாகத்தான் தூங்கமுடியுமா? பாதி இரவில்
எழுந்து சமயலறைக்கு ஓடுவீர்கள் அல்லவா. எதுவுமே தாமதம் இல்லை, சரியான
திட்டமிடல்கள் இருந்தால் உங்களுக்குத்தான்.
7.”நாம் குழுவாக செய்தால் நன்றாக இருக்காது”
ஒன்றை மறந்துவிடாதீர்கள் ஒரு குழுவாக ஒரு வேலையைச் செய்தால், அந்த
வேலை சிறப்பாக அமையும் , நீங்களும் நிறைய மற்ற உறுப்பினர்களிடம் நிறைய கற்றுகொள்ள
வாய்ப்புகள் அதிகம்.
8.”அப்புறம் பார்க்கலாம்”
ஹ்ம், இபோதே பார்க்காத நீங்கள் அப்புறம் எங்கே பார்க்கப்போகிறீர்கள்.
எனவே அப்புறம் எதையும் ஒதுகதீர்கள். நஷ்டம் உங்கள் கணக்கில்தான் விழும்.
9.”எனக்கு நிறைய வேலையிருக்கிறது”
ஒரு சந்தர்ப்பம் நம்மை நோக்கி வந்தால் நாம் இப்படித்தான் அதைப்பற்றி
அறிந்துகொள்ளாமல் ஏதாவது சாக்கு சொல்லி தவிர்த்துவிடுவோம் மறந்துவிடாதீர்கள்
வெற்றியும் நம்மைத் தவிர்த்துவிடுகிறது.
எனவே இந்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் வாழ்கையில் வெற்றி அடைய OnlineArasan
இணையதளத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment