Friday, 21 November 2014

உங்களை நிங்களே பிரபலபடுத்திக்கொள்வது(பிராண்டிங்) எப்படி?


உங்களை நிங்களே பிரபலபடுத்திக்கொள்வது என்பது ஒரு கலை என்று குறிப்பிடவேண்டும். உங்களை மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் பிரபலபடுத்துதல். ஒரு குறிப்பிட்ட வகை விஷயத்தைப் பற்றி நினைத்தால் குறிப்பிட்ட குறிபிட்டவர்கள்தான் தான் மனதிற்கு தோன்றும்.

அதே போல் நம்மையும் பிரபலப்படுத்திக்கொள்ள முடியும். தமிழ்நாட்டில் எப்படி திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லிகை, சேலம் மாம்பழம் போல உங்களையும் நீங்கள் பிரபலப்படுத்திகொள்ள முடியும். 

கணினி உலகின் உலக ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், பாப் இசையில் மைக்கேல் ஜாக்‌சன் என முக்கியமான பிராண்ட்-ஆக மாறி நிற்கும் தனிமனிதர்களை சொல்லலாம். 

இவர்களைப் போல நீங்கள் உங்களையும் பிராண்டிங் செய்யலாம். எப்படி

உங்களுக்கு தெரியாமல் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் நன்கு பரிட்சயமிக்கவராக இருப்பீர்கள். உங்களிடம் கேட்டால், அந்த விஷயத்திற்கு தெளிவு கிடைக்கும் என உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நினைப்பார்கள். அதுபோன்ற விஷயங்களில் உங்களின் தேடல்களையும், அதில் ஏற்படும் புதிய மாறுதல்களையும் அப்டேட் செய்து கொள்ளுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் அலுவலகத்திலோ அல்லது உங்களை சுற்றியுள்ள குழுவுக்கோ அது குறித்த சந்தேகம் எழுந்தால் அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். இப்படி மற்றவர்கள் உங்களைத் தேடி வரும்போது நீங்கள் ஒரு பிராண்ட் ஆக மாறியிருப்பீர்கள். 
ஒரு வேலையை எல்லாரும் செய்வது போல் செய்தால் அது தனியாக தெரியாது. அப்படி தெரிய வேண்டும் எனில், ஒரு நிறுவனம் தன் தயாரிப்பின் சிறப்பம்சத்தை வைத்து ஒரு பொருளை எப்படி பிராண்ட் செய்கிறதோ, அதுபோன்று உங்களிடம் உள்ள தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி உங்களை பிராண்ட் செய்துகொள்ளுங்கள். அதனால் உங்களிடன் சில வேலைகளை கொடுத்தால், அதனை புதுமையாகவும், சிறப்பாகவும் செய்ய முடித்துக் காட்டுங்கள். ஒருமுறை நீங்கள் செய்துகாட்டினால், அடுத்தமுறை அந்த உங்களைத் தேடி ஓடிவரும். 

பிராண்டுகள் என்பது விளம்பரம் செய்வது என்று நினைத்தால் அது தவறு. ஒரு நிறுவனம் தயாரிக்கும் விளம்பரம் என்பது வெறும் விளம்பரப்பலகையோடும், வீடியோக்களோடும் நின்றுவிட்டால், அது தோல்விதான். அதேபோல், ஒருவர் தனக்கு இந்த விஷயம் தெரியும் என்று நிறுத்திக்கொண்டால் அதுவும் தவறு. அதனை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டே இருந்தால்தான், அதனை மாற்றும் வெற்றி விகிதம் கண்டறியப்பட்டு அதில் பிரபல பிராண்டாக உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

எப்படி செய்வது?

1.மல்டி டாஸ்கிங் நபர் என்று கூறும் அளவிற்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் நபராக இருங்கள். அது உங்களை தனித்து காட்டும்.
3.உங்களிடம் கேட்டால் இந்த விஷயம் தெரியாது என்ற நிலை உருவாகாமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது தான் நீங்கள் வெளி உலகிற்கு அடையாளம் காணப்படுவீர்கள்.

4.விளம்பரம் என்பது நீங்கள் எனக்கு இது தெரியும் என்று இல்லாமல் இவருக்கு இது நன்றாக இது தெரியும் என்று பரிந்துரைக்கும் அளவில் இருப்பது அவசியம்.


No comments:

Post a Comment