நீண்ட காலமாகவே ஒரு விசயத்தைப் பற்றி எழுத வேண்டும் இருந்தேன் இதை என் முதல் பதிவாகவே ஆரம்பிக்கிறேன். நான் கேரளம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் இணையும் ஒரு மலை கிராமத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் வளர்ந்து, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டத்தில் படித்து, இப்பொழுது வேலை மித்தமாக பெங்களுருவில் வாழ்கிறேன். ஒரு நாடோடி என்றும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள். சரி விஷயத்திற்கு வருவோம்.
இரஜினிகாந்த், இவரை பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்று இல்லை தமிழ் பேச, எழுதத் தெரிந்தவர்கள் அனைவரும் அறிவர். இவரைப்பற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கிறது, இவன் ஒரு கன்னடன், இவன் ஒரு மராத்தியன், கூத்தாடி, தைரியம் இல்லாதவன், ஒரு வியாபாரி, தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அல்லது ஏமாற்றி சொத்து சேர்த்துக்கொண்டான், தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சான், இந்த வயதிலும் நடிக்கிறான் சேர்த்த சொத்துப் போதாதா, பேத்தி வயது நடிகைகள் உடன் நடிக்கிறானே, ஒன்னு அரசியலுக்கு வரேன் வரலன்னு சொல்லவே மாட்டான் இன்னும் இருக்கலாம் எனக்கு இவ்வளவுதான் ஞாபகம் வந்தது.
“ இவன் கன்னடன், மராத்தியன் ”
அட... அட... அழகியத்தமிழ் மகன்ளே, உங்க பூர்விகம்லாம் உங்களுக்குத் தெரியுமா? இத சொல்றதுக்கு உங்களுக்கு யோக்கியதை இருக்கா? இத ஒரு சுத்தத் தமிழன் கேட்டா ஒரு நியாயம் இருக்கு? தமிழன் போர்வைல கேள்வி கேட்குற பயந்தான்கொளிகள், தொடைநடுங்கிகிகளே... உங்கள் சுயத்தை வெளிக்காட்டத் தயாரா? தமிழுக்காக என்ன செய்து கிழித்தீர்கள், உங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கவைத்துவிட்டு தமிளு... தமிலு... என்று நடிக்கும் பசோந்திகளே தெரிந்துகொள்ளுங்கள் பிறப்பால் மராத்தியனாக இருந்தாலும், வளர்ப்பால் கன்னடனாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம்தான் அவருக்கு பூர்விகம், ஆதலால் அவரும் தமிழரே.
“ அவன் வியாபாரி, என்னசெய்தான் தமிழ்நாட்டிற்கு ”
சரி நீங்கள் உங்கள் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்று உழைத்து பணம் சம்பாரிக்குரீர்கள், ஏன் அந்த பணத்தை நீங்களே வைத்திருக்கவேண்டும் பிழைப்புக்காக சென்ற ஊருக்கு கொடுத்துவிட்டு கோமணத்துடன் வாங்களேன் பார்க்கலாம், முடியாதல்லவா...? உண்மையில் செய்யவேண்டியதை என்றோ தமிழ்நாட்டிற்குச் செய்துவிட்டார், அதை சொல்லிக்காட்டுவது என் வேளை அன்று. இரஜினிகாந்த் படத்தைப் பார்க்க தமிழை கற்றவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள், நீங்கள் தமிழுக்காக என்ன கத்தை கட்டுநீர்கள்? அத்தனையும் அயோக்கியத்தனம்தான் நீங்கள் செய்ததது.
“ சொத்து சேர்த்தது போதாதா “
சொத்து சேர்த்தார் சொத்து சேர்த்தார் என்று கூறும் மூடர்களே, முட்டாள்களே, அவர் என்ன உங்கள் பையில் இருந்த பணத்தை பிடுங்கிக்கொண்டரா? உங்கள் நிலத்தை அபகரிதரா? உழல் செய்தாரா?. நீங்கள் நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியை ஒரு முறையேனும் உண்மையான வருமானத்திற்கு செலுத்தியிருப்பீர்களா? அட வருமான வரியை நீங்கள் கட்டியதுண்டா? ஊரை ஏமாற்றி வாழும் உங்களுக்கு இரஜினிகாந்த் பற்றி பேச யோக்கியதை இல்லை.
“ பேத்தி வயது நடிகைகள் உடன் நடிக்குறான் “
அட சோனமுத்தா... அடேய் சோனமுத்தா... நான் நடிக்கும் படங்களை எல்லோரும் பார்த்தே ஆகவேண்டும் என்று சொன்னாரா? இல்லை உன் பேத்தியைதான் என்னுடன் நடிக்க அனுப்பு என்று உன் வாசலில் வந்து நின்றாரா? திரைப்படத்தை பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கத் தெரியாத உங்களை என்வென்று சொல்லித்தொலைவது. உனக்கு பிடிக்கவில்லையா பார்க்காதே, உங்களுடைய எல்லாத்தையும் மூடிக்கொண்டு உங்கள் வேலையை பாருங்கள்.
“ அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? “
அவர் வந்தால் உனக்கென்ன வரவில்லை என்றால் உனக்கென்ன? முதலில் ஓட்டு போடும் பழக்கம் இருகிறதா உங்களிடம்? காலையில் முதலாக சென்று ஓட்டு போட்டு தன் சமுதாயக் கடமையாற்றும் அவரைப்பற்றி பேச உங்களுக்கு யோக்கியதை இல்லை. முதலில் உங்களை நீங்களே திருத்திக்கொள்ளுங்கள் அதற்குப்பிறகு அந்த மனிதரைப்பற்றி (இரஜினிகாந்த்) பேசலாம்.
நன்றி... http://badwriterintamil.blogspot.in/
No comments:
Post a Comment