Wednesday, 5 November 2014

மின்க்கட்டணம் மீண்டும் உயர்வு


மின்  கட்டணத்தை மேலும் உயர்த்துவது பற்றி பொது மக்களிடம் கருத்து கேட்கும் கூட் டம் சென்னை, திருநெல் வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் நடத்தி முடிக் கப்பட்டு விட்டது.
இதில் பங்கேற்ற பொது மக்கள் மின் கட்டணத்தை உயர்த்துவதுற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டணத்தை உயர்த்த ஏற்கனவே முடிவு செய்து விட்டு கடமைக்காக மக்களி டம் கருத்து கேட்கிறீர்கள். நாங்கள் சொல்வதை நீங்கள் செயல்படுத்த போவதில்லை என்று கூட்டத்தில் பொது மக்கள் ஆவேசமாக கூறி னார்கள்.
இந்த நிலையில் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த தால் மக்கள் தெரிவித்த கருத்துக் கள், ஆட்சேபனைகள், ஆலோசனைகள் குறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சென்னையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது மின் கட்டண உயர்வை 10-ந்தேதி அறி விக்கலாம் என்று முடிவு செய்ததாக தெரிகிறது. உயர்த்தப்படும் மின் கட்டண பட்டியலை மின் சார ஒழுங்கு முறை ஆணை யம் வெளியிட்டதும் அந்த தேதியில் இருந்து இந்த மாதமே மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்து விடும்.
மின் கட்டணம் உயர்த் தப்படும் போது அதில் அரசின் மானியம் எவ்வளவு என்ற விவரமும் வெளி யிடப்படும்.
உத்தேச கட்டண உயர்வு பட்டியல்
 வீட்டு மின் இணைப்பு

0 முதல் 100 யூனிட்டுக்கு முந்தைய கட்டணம் ரூ.2.60 புதிய கட்டணமாக ரூ.3.00
0 முதல் 200 யூனிட்டுக்கு முந்தைய கட்டணம் ரூ.2.80 புதிய கட்டணமாக ரூ.3.25
0 முதல் 500 யூனிட்டுக்கு முந்தைய கட்டணம் ரூ.4.00 புதிய கட்டணமாக ரூ.4.60
501 க்கு மேல் யூனிட்டுக்கு முந்தைய கட்டணம் ரூ.5.75 புதிய கட்டணமாக ரூ.6.60
கடைகள்---------------  முந்தைய கட்டணம் ரூ.7.00 புதிய கட்டணமாக ரூ.8.05 
தொழிற்சாலைகள் ------  முந்தைய கட்டணம் ரூ.5.50 புதிய கட்டணமாக ரூ.7.22   
தற்காலிக இணைபு -----  முந்தைய கட்டணம் ரூ.10.50 புதிய கட்டணமாக ரூ.12.10  

இதில் வீட்டு இணைப்புக்கு 500 யூனிட்டுக்கு மேல் போகும் பொது அரசின் மானியம் கிடைக்காது

No comments:

Post a Comment