வீடு – சராசரி இந்தியனின் கனவு
நாம் அனைவரும், இந்த
இந்தியத் திருநாட்டில் தினம் தினம் வாழ்கை நடத்தவே நிறைய போரட்டங்களோடுதான்
வாழ்கிறோம். நாம் அனைவரும் நிறைய கொடுமைகளை அனுபவித்துத்தான் ஒரு நிலையில்
இருந்துதான் இன்னொரு நிலைக்கு போகவேண்டியிருக்கிறது.
அதில் ஒரு சாதாரண
நடுத்தர இந்தியனின் தன் வாழ்நாள் கனவே தனக்கென்று ஒரு வீடு கட்டி அதில் வாழ
வேண்டும் என்பதுதான். இந்த நாட்டில்தான் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குத்தான்
எந்த நல்லதும் நடந்துவிடாதே.
முருகன், என்னுடன்
மூன்று வருடம் ஒன்றாக கல்லூரியில் எபோதும்
என் இடப்பக்கத்தில் அமருபவன். இருவரும் ஒரே ஊர்தான்.
இரண்டு வருடங்களுக்கு
முன்பு முருகனின் அப்பா, தாங்கள் இருந்த பழைய ஓட்டு வீட்டை இடித்து மாடி வீட்டை
கட்ட முடிவு செய்து பணியில் இறங்கினார். அங்கே கடன், இங்கே கடன், வங்கியில் கடன்
என்று அத்துணை கடன் வாங்கித்தான் வீடு ஓவ்வொரு அடியும் உயர்ந்தது.
நான்கு மாதங்களுக்கு
முன்பு ஒரு முறை முருகனை சந்திக்கும்போது வீடு முழுவதும் கட்டி முடிந்துவிட்டது.
இனிமேல் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று கூறினான்.
இப்போது நண்பன்
ஒருவன் திருமணத்திற்குப் சென்றிருந்தபோது கேட்டேன், இப்போது எவ்வளவு கடன்
கழிதீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தைகள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. ஆம்
“வீட்டையே விற்று விட்டோம் எங்களால் கடனை அடைக்க வேறு வழியே இல்லை, நாங்கள் கட்டிய
சொந்த வீட்டை விற்று, அங்கேயே வாடகைக்கு இருக்கிறோம்” கடவுளே எனக்கு அப்போது பேச
வார்த்தைகள் வரவே இல்லை.
அப்போது நான் இந்த
கொடுமை உலகில் வேறு யாருக்கும் வரக்கூடாது என்றேன். அதற்கு அவனோ என்ன செய்வது
எங்களுக்கு எங்களுக்கு இந்த கொடுமை நடந்தே விட்டது என்றான். மனதை தளரவிடாதீர்கள்.
நிலைமை வெகு விரைவிலேயே மாறிவிடும் என்று கூறினேன். சரி போகட்டும் எல்லா கடனையும்
அடைத்துவிட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு அவன் இன்னும் இல்லை இன்னும் மூன்று
லட்சம் கடன் இருக்கிறது என்றான். எனக்கு இன்னும் வருத்தமாக இருந்தது.
முருகனின் அப்பா
எங்கள் ஊர் தக்காளி மண்டியில் உரக்கடை வைத்துள்ளார். ஆனால் கடையில் ஏனோ வியாபாரம்
அந்த அளவுக்கு இல்லை. முருகன் ஓசூரில் ஒரு நிறுவனத்தில் 8500 ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை செய்கிறான்.
அம்மா வீட்டை பார்த்துக்கொள்கிறார். இவர்கள் வாங்கிய மொத்த கடன் 35 லட்சம் மேல்,
கடனை அடைக்க சாத்தியமே இல்லை. யாருடைய கெட்ட நேரமோ இவர்களுடைய வருமானத்திற்கு
மிகவும் கூடுதலாகவே கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் யாரோ ஒரு பெங்களூரு காரரிடம்
விற்றுவிட்டார்கள். இப்போது இவர்கள் கட்டிய சொந்த வீட்டை விற்று அந்த வீட்டிலேயே
வாடகைக்கு இருக்கவேண்டிய கொடுமைக்கு
தள்ளப்பட்டிருக்கிறார்கள். என் அம்மா மற்றும் என் அண்ணனிடம் சொன்னேன் பாவம் அவர்களாலும்
ஏற்றுக்கொள்ள முடியாமல் திரும்பத் திரும்ப கேட்டார்கள் “உண்மையாவா சொல்ற” என்று.
அடுத்து நாங்களும்
வீடு கட்டவேண்டும் என்று நினைக்கிறோம்!!!...
நன்றி
No comments:
Post a Comment