சமிபத்தில்தான் ஜில்லா
திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது பேருந்தில்தான் ஒளிபரப்பினார்கள் அதான்
பார்த்தேன், சரி அதை விடுங்கள். ஜில்லா படம் முடியும்போது எனக்கு இன்னொரு படம்தான்
நினைவுக்கு வந்தது. அந்தப்படம் அஜித் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
வெளிவந்த தீனா திரைபடம்தான்.
எப்படி என்கிறீர்களா விளக்கம் இதோ!
1.ஜில்லாவில் விஜய் வளர்ப்பு மகனாக நடித்தார், தீனாவில்
அஜித் வளர்ப்புத் தம்பி.
2.இதில் மோகன் லால் தாதா, அதில் சுரேஷ் கோபி தாதா.
3.இதில் காஜல் டம்மி பீஸ் அதில் லைலா அதாங்க படத்தில் கதாநாயகி.
4.இதில் தந்தைக்காக
விஜய் அடியாளாக இருப்பார் அதில் அண்ணனுக்காக அஜித் அடியாளாக இருப்பார்.
5.இதில் தங்கச்சி செண்டிமெண்ட் படத்தில் போக்கை மாற்றும்,
அதிலும் அதே தங்கச்சி செண்டிமேன்ட்த்தான் படத்தின் போக்கை மாற்றும்.
6.ஒரு கட்டத்தில் விஜய் திருந்திவிடுவார், அதில் அஜித்தும்
திருந்தி விடுவார்.
7.இதில் தன் வளர்ப்பு அப்பாவை விஜய் எதிர்த்து, மோகன் லால்
நல்லவராக மாறவேண்டும் என்று முயற்சி செய்வார். தீனா படத்தில் அஜித்தும் சுரேஷ்
கோபியை எதிர்த்து, அவரும் திருந்த வேண்டும் என்று முயற்சி செய்வார்.
8.ஜில்லாவில் ஒரு
கதாப்பாத்திரம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் டபுள் கேம் விளையாடும்,
தீனவிலும் காட்சிகள்தான்.
9.இறுதியில் ஜில்லா மற்றும் தீனா இரண்டு படத்திலும்
சண்டைக்காட்சியில் எதிரியை பந்தாடி விஜய்யும், மோகன் லாலும் இணைவார்கள். தீனா
படத்திலும் அஜித்தும், சுரேஷ் கோபியும் பந்தாடி இணைவார்கள்.
10.சுபம்,வணக்கம், The End.
இப்பொழுது சொல்லுங்கள் ஜில்லா, தீனா ஒரே கதைதானே.
அப்படா வந்த வேளை முடிந்தது சிக்கன் பீசே... சிக்கன்
பீசே...
No comments:
Post a Comment