Tuesday, 4 November 2014

எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்

3
எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் குரு (Jupiter)
ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள். தனக்கு எதிரியான 6 எண்காரர்களுக்கும் இவர்கள் நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல், பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள்.
தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். முகஸ்துதி செய்வதன் மூலம் மற்றவர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைப்பார்கள். அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகௌரவம் பார்ப்பது இவர்களது குறைபாடாகும். இதனாலேயே பல நல்ல வாய்ப்புகளை இவர்கள் வாழ்க்கையில் இழந்திருப்பார்கள். இவர்கள் பழைய சாத்திரங்கள், பழைய பழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறப் பயப்படுவார்கள்.
பெயர் கெட்டு விடுமோ என்று பெரிதும் அஞ்சுவார்கள். உயிருக்குச் சமமாக கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள். இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும் அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பாலம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள். கோயில் நிர்வாகம், ஊர்த்தலைமை போன்ற பதவிகளில் கௌரவமாக (ஊதியம் பெறாமல்) வேலை செய்ய விரும்புவார்கள். அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். சில சமயங்களில் ஆவேசமாகவும் எதிர்ப்பார்கள். கையில் பணமிருந்தால் அழுகுக்காகவும், சிக்கனத்திற்காகவும் (தேவையைப் பற்றிக் கவலைப்படாமல்) பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வார்கள்.
சொத்துக்கள் விஷயத்திலும் விட்டுக் கொடுக்கும் குணம் அதிகம் உண்டு. ‘‘என் தம்பிதானே வைத்துக் கொள்ளப் போகிறான், வைத்துக் கொள்ளட்டும்.’’ என்று எதார்த்தமாக நினைப்பார்கள். தங்களத உரிமையை விட்டுக் கொடுத்து விடுவார்கள். இந்தக் குணத்தால் பல அன்பர்கள் பிற்காலத்தில் கவலைப்படுவார்கள். இவர்கள் தீனிப்பிரியர்கள். காபி, டீ, டிபன் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள். குரு ஆதிக்கம் நன்கு அமையப் பெற்றவர்கள். அன்பிலும், பக்தியிலும், சிறந்தவர்கள்.
ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக் காட்டுவார்கள். தேசப்பற்றும் நினைந்தவர்கள். பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தாயராவார்கள். பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்திருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள். ஆனால் குரு பலம் குறைந்தவர்கள் கடன் என்னும் பள்ளத்தில் விழுந்து விடுவார்கள். சிந்திக்காமல் பல காரியங்களில் இறங்கித் தாங்களே சிக்கிக் கொள்வார்கள். சில அன்பர்களுக்குக் காதல் தோல்விகளும் ஏற்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment