என்ன மா சிம்பு... இப்படி பன்றியேமா... என்றாகிவிட்டது கதை, விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் 'வாலு'. தமன் இசையமைக்க, எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்து வந்தார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.
பணப்பிரச்சினையில் இருந்து மீண்டு, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 'தாறுமாறு' என்னும் இறுதிப் பாடலை விரைவில் படமாக்க இருக்கிறார்கள். டிசம்பர் 24ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், 'கயல்', 'மீகாமன்', 'காக்கி சட்டை', 'எனக்குள் ஒருவன்' என படங்கள் டிசம்பர் 24ல் வெளிவர இருப்பதால் 'வாலு' திரைப்படத்தை மறுபடியும் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
இது குறித்து 'வாலு' தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, "'வாலு' திரைப்படத்தின் வெளியீடு முதலில் டிசம்பர் 24-ஆம் தேதி அன்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதால் அதற்கு இன்னும் பெரிய பிரம்மாண்ட வெளியீடு வேண்டும் என்று நினைத்தேன்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை 'வாலு' கண்டிப்பாக பூர்த்தி செய்யும். எனவே விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களோடு பேசியதைத் தொடர்ந்து, 'ஐ' மற்றும் 'லிங்கா' படங்களின் வெளியீட்டிற்குப் பிறகு 'வாலு'வை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளோம். சிம்புவும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
பிப்ரவரி 3-ஆம் தேதி 'வாலு' வெளியாகும். சிம்புவின் முந்தைய ஹிட் படங்களை, 'வாலு' கண்டிப்பாக முந்தும் என்று சிம்பு ரசிகர்கள் அனைவருக்கும் நான் நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”என்று கூறியுள்ளார். இந்த முறையும் சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
No comments:
Post a Comment