இந்த யுகம் கலி யுகம். கலி என்று பார்த்தால் அது சனி. சனி யுகம் என்றும்
சொல்லலாம். சனி என்று பார்த்தால் எல்லாம் தலைகீழ், அவசரகதி, வக்கரகதி என்ற ரீதியில்
ஓடிக் கொண்டிருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் எல்லாம் பார்க்க நேரம் இருப்பதில்லை.
அதனால் சிறுவர்களிடம் முன்பைவிட தற்பொழுது
பாலுணர்வு அதிகரித்துள்ளது. இதனால்தான் பாலியல் குறித்த பாடம்
கொண்டுவர வேண்டும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் நிறைய பேர்
சொல்கிறார்கள்.
இதனால்தான், 22 அல்லது 23இல் திருமணம் முடித்தால் நல்லது. ஒவ்வொரு குறிப்பிட்ட வயதிற்கும் ஒவ்வொரு
கிரகத்தினுடைய ஆளுமை இருக்கும். அப்படி பார்க்கும் போது 20 முதல் 24 வயது வரை சுக்ரன் மற்றும்
இராகுவோடு வருகிறது. இது ஒருவிதமான கிளர்ச்சியை உண்டாக்கும். இதனால் பாதை மாறும்
வாய்ப்பு உள்ளது.
அதன்பிறகு, குழு மனப்பான்மை, குழுவாகச் சேர்ந்து தாக்குதல், குழுவாகச் சேர்ந்து திட்டமிடுதல், இது நன்மைக்கும் கொண்டு போகும் தீமைக்கும் கொண்டு போகும்.
அதனால்தான் குறிப்பாக 22, 23இல் மணம் முடித்தால் செம்மையாக இருக்கும்.
ஆண்களுக்கு 24, 25, 27 இதில் திருமணம் முடித்தால் நலம். ஏனென்றால் குருவினுடைய ஆதிக்க எண்ணாக
வரக்கூடியது எண்ணாக வரக்கூடியது, அதனால் இதில் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment