நவக்கிரகங்களால் முக்கியமாக ராகு, கேது இவர்களால் ஏற்படும் கெடுதல்களைப் போக்கி எல்லா நன்மைகளையும் காளகஸ்தி தலம் செய்து வருவது பக்தர்கள் அறிந்த விஷயம்.
சர்பத்தின் தலையுடன் கூடிய கேதுவும், சர்பத்தின் உடலுடன் கூடிய ராகவும் பரமசிவனை வழிபட்டு நிழல் கிரகங்களாக திகழ்ந்து ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருபத்தைந்து வருடங்களை நடத்திச் செல்கின்றன. ராகு தசை பதினெட்டு வருடங்கள். கேது தசை ஏழு வருடங்கள்.
காளகஸ்தீஸவரை இவர்கள் வழிபட்டு அவரது உடலிலேயே ஸ்தானம் பெற்றிருப்பதால் காளகஸ்தீஸ்வரரின் தரிசனம் இவர்களால் ஏற்படும் கெடுதலான பாதிப்புகளை நீக்குகிறது. பாதாள விக்னேஸ்வரரின் வழிபாடும் காளஹஸ்தீவரரின் தரிசனமும், அம்பாளின் அருளும் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியவை.
கண்ணப்பருக்கு அருள் செய்த காளஹஸ்தீசனின் மகிமையால் ராகு, கேதுக்களுடைய தீய பலன்களிலிருந்து விடுபட்டு எல்லோரும் பலன் பெறலாம். இக்காளகஸ்தி தலத்தில் ராகு, கேது தோஷங்கள் நீங்குவதற்காக விசேஷமான பூஜைகள் செய்வதற்கு அனேக வசதிகள் உள்ளன. சர்ப தோஷத்தால் குழந்தைகள் இல்லாதிருப்பவர்களும்,
திருமணம் தடைபட்டு வருபவர்களும், திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி உறவு சரியில்லாமல் கவலைப்படுபவர்களும், குடும்ப சச்சரவுகளால் மன அமைதி இல்லாதிருப்பவர்களும் இத்தலத்தினில் பாதாள விநாயகர், ஞானப் ரசினாம்பாள், ஸ்ரீ காளகஸ்திசர் இவர்களை வழிபட்டு எல்லாவித நன்மைகளும் பெற்று வருகிறார்கள்.
ராகு-கேது பரிகார பூஜை இந்தியாவில் வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி இங்கு தினமும் விமரிசையாக நடக்கிறது. இதற்காகவே மண்டபத்தில் தோஷ பூஜைக்கு வருபவர்களை இரு பக்கமும் உட்கார வைத்து பரிகார பூஜை நடத்துகிறார்கள். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு குறையாமல் இந்த பரிகார பூஜை செய்வது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment