(Source inventorspot)
தலைப்பைப் பார்த்ததும் என்ன கதை விடுகிறீர்களா என்று நீங்கள் நினைப்பது
எங்களுக்கு புரிகிறது. ஆனால் இது போலி மருத்துவர்களின் வாக்குறுதி அல்ல உண்மையான
மருத்துவர்களால் கண்டுபிடித்தது பரிசோதனையும் வெற்றி பெற்ற கதை.
நமது இந்த பூமியில் கிடைக்கும் ஒரு வித மூலிகையானது “புற்றுநோய் கொல்லி”
என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இதை புற்றுநோய்க்கு உள்ளன எலிகளுக்கு கொடுத்து
நாற்பது நாட்கள் வரை சோதித்துப் பார்த்ததில் இந்த மூலிகை புற்றுநோய்யை இருந்த
அறிகுறியே இல்லாத அளவிற்கு நாற்பது நாட்களில் முழுவதுமாக போக்கிவிடுகிறது என்று
புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை தற்போது புற்றுநோய் பாதிகப்பட்ட மனிதர்களுக்கு கொடுத்துப் பார்க்க
தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மூலிகையின் பெயர் “லீய் காங் டெங்(சீன பெயர்)”, “துண்டேர் காட்
வின்(ஆங்கிலப் பெயர்)” அல்லது “புற்றுநோய் கொல்லி மூலிகை(தமிழில்)”. இது சீனாவில்
அதிகஅளவில் காணப்படும் ஒரு வகை மூலிகை, பண்டைய சீன மருத்துவர்களால் மிகவும் அதிக அளவில்
இந்த மூலிகை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மின்னேஸ்சொட்டா மசொனிக் பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் நடந்த
ஆராய்ச்சியில், “புற்றுநோய் கொல்லி மூலிகையானது எலியின் உடலில் எவ்வித புற்றுநோய்
அறிகுறிகள் இல்லாமல் அகற்றிவிட்டது மேலும் இந்த சிகிச்சையினை நிருத்தியபின்பும்
புற்றுநோய் அறிகுறியே தோன்றவில்லை என்பது மற்றுமொரு ஆச்சர்யமான தகவல்” என்று
Science Translational Medicine என்ற இதழில் வெளியிட்டிருந்தது.
இந்த புற்கள் வகை “புற்றுநோய் கொல்லி” மூலிகையானது அதிக அளவில்
Triptolide என்ற மூலப்பொருளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூலப்பொருள்தான் தற்போது
புற்றுநோய்யை கட்டுப்படுத்தும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மூலிகையைப்பற்றி பல வருடங்களுக்கு முன்பே தெரிந்தாலும் மருந்து
நிறுவனங்கள் போதிய ஆர்வத்தை காட்டவில்லை என்பதே உண்மை. காரணம் இவர்கள் இவர்கள்
ஏற்கனவே கண்டுபிடித்த மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தது. லாபம் குறைந்துவிடும்
என்பதால் இதில் ஆராய்ச்சி செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். இந்த “புற்றுநோய் கொல்லி”
போலவே “இஞ்சி” கூட புற்றுநோய்க்கு அருமையான மருந்தாகும்.
சில மருத்துவர்களால் உலகம் முழுவதும் சில இடங்களில் ஆராய்ச்சி செய்து FDA
விடம் அனுமதிக்காக காத்திருக்கிறது. இந்த மூலிகை சீனாவில் அதிக அளவில் இருக்கிறது,
அதனால் நிச்சியமாக இந்தியாவிலும் ஏன் தமிழ்நாட்டிலும்கூட இருக்க வாய்ப்புகள்
அதிகம்.
No comments:
Post a Comment