கூகுள் Android One இயங்கு தளத்தை இந்தியாவில் பிரபலபடுத்த அது குறைந்த விலையில் அலைபேசி தயாரிக்கும் நிறுவனங்களோடு சேர்ந்து ஸ்மார்ட் போன்களை அனைவரும் பயன்படுத்தும்படி குறைந்த விலையில் கொடுக்கின்றது.
அவை Quad Core Processor, 1 GB RAM, 4 GB நினைவகத்தையும், 1,700 mAh மின்கலனையும் கொண்டுள்ளதாகவும், Android 4.4 இயங்கு தளத்தினை உடையதாகவும் உள்ளன.
அவை Quad Core Processor, 1 GB RAM, 4 GB நினைவகத்தையும், 1,700 mAh மின்கலனையும் கொண்டுள்ளதாகவும், Android 4.4 இயங்கு தளத்தினை உடையதாகவும் உள்ளன.
மைரோமேக்ஸ் CANVAS A1
இதன் முக்கியமான அம்சமாக இதன் Circular Back Cameraவினையே எல்லோரும் குறிப்பிடுகின்றனர். Temple Run மற்றும் Angry Birds, போன்ற விளையாட்டுகளுக்கு இது மிக சிறந்ததாகும். இதன் ஒலிப்பான் மிக சத்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. அதே போல இதன் திரையும் தெளிவானதாகவும், பல கோணங்களை உடையதாகவும் உள்ளது. இதன் ஒரே குறை இதனுடைய மின்கலன் மட்டுமே ஒரு நாள் முழுவதும் இதனை பயன்படுத்த பெரும் போராட்டம் செய்ய வேண்டியுள்ளது. இதன் விலை 6499 ரூபாய் ஆகும்.
SPICE DREAM UNO
6399 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் இந்த போன் எளிமையான வடிவமைப்பு கொண்டதாகவும், பல்வேறு செயல்களுக்கு(Multitasking) பயன்படுத்தகூடியதாகவும் இருக்கிறது. இது அடிப்படையான விளையாட்டுகளுக்கு பயன் படக்கூடியதாகவும், RAM பயன்பாடுகளை பொருத்தவரை CANVAS A1 விட சிறந்ததாகவும் உள்ளது. இதன் மிக முக்கியமான சிறப்பு இலவசமாக 10GB மேக நினைவகம்(Cloud Storage) தருவதாகும்.
KARBONN SPARKLE V
இதன் முன் பக்க உரையானது Fingerprint magnet சொல்லக்கூடிய தொழில் நுட்பத்தால் ஆனது. இது நீல மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் இயங்குதளம் ஆண்ராயிட் ஒன்னின் இயல்புடையது. இதன் 5 MP கேமராவானது தெளிவாக இல்லை ஆனால் இதன் மின்கலம் எதிர்பார்த்த படி உள்ளது. ஒரு நாள் முழுதும் அது தாங்கும் சக்தி கொண்டுள்ளது. இதன்விலை 5999 ரூபாயாகும்.
மேலும் புதிய Smartphone செய்திக்கு
http://onlinearasan.blogspot.in/search/label/Mobiles
No comments:
Post a Comment