மருதநாயகத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கும் கனவை கைவிடாத கமல்ஹாஸன், அதற்கு மீண்டும் ஒரு சரித்திர முயற்சியில் இறங்குகிறார். இந்த முறை அவர் கையிலெடுப்பது திப்பு சுல்தான் கதை.
இப்போது அவரது மூன்று படங்கள் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. இவற்றை வெளியிடும் பொறுப்பை அவற்றின் தயாரிப்பாளர்களிடமே விட்டுவிட்டு, அடுத்து தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 'திப்பு சுல்தான்' படத்தை ஆரம்பிக்கிறார்.
திப்பு சுல்தானாக நடிக்கும் கமல் ஹாஸன், அதற்கான மேக்கப்புக்கு அமெரிக்க கலைஞர்களை ஒப்பந்தம் செய்கிறார். படப்பிடிப்பின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவில் நடத்தப் போகிறாராம். இதற்காக லொகேஷன் பார்க்க ஆஸ்திரேலியா கிளம்பிவிட்டார் கமல்.
No comments:
Post a Comment