Saturday, 22 November 2014

மங்கள்யான் 2014 ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு


2014
ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக மங்கள்யான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகளால் முடியாததை இந்தியா செப்டம்பர் 24 ஆம் தேதி செய்தது. அன்று தான் இந்தியா மங்கள்யான் வின்கலத்தை செவ்வாய் கிரகத்தில் செலுத்தியது அதுவும் முதல் முயற்சியில் செய்த முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றது. டைம்ஸ் பத்திரிக்கை மங்கள்யானை சூப்பர் ஸ்மார்ட் ஸ்பேஸ்கிராப்ட் என்று குறிப்பிட்டுள்ளது.

2014
ஆம் ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக மங்கள்யான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ரூபாய் 450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் க்ராவிட்டி படத்தின் பட்ஜெட்டை விட குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய வான்வெளி ஆராய்ச்சியில் இது பல சாதனைகளை மேற்கொள்ள அடித்தளமாக அமைந்துள்ளது.


No comments:

Post a Comment