ரஜினியின் அடுத்த படத்தையும் கே எஸ் ரவிக்குமாரே இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஎஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து லிங்காவோடு சேர்த்து இதுவரை மூன்று படங்கள்தான் செய்துள்ளார் என்றாலும், ரஜினியின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர் என்ற பெயரைப் பெற்றுவிட்டார். ரஜினி எந்தப் படத்தில் நடித்தாலும் அதுகுறித்த விவாதங்கள் அல்லது ஆலோசனைகள் ரவிக்குமார் இல்லாமல் நடக்காது எனும் அளவுக்கு ரஜினிக்கு நெருக்கமானவர் இவர்.
இப்போது ரஜினியை மூன்றாவது முறையாக இயக்கியுள்ளார் லிங்காவில். இந்தப் படத்தை திட்டமிட்டபடி 100 நாட்களில் முடித்த ரவிக்குமார், ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாகும் வகையில் வேலைகளை கச்சிதமாகச் செய்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு ஷங்கர் படத்தில் ரஜினி நடிக்கக் கூடும் எனக் கூறி வந்தனர்.
இந்நிலையில், லிங்காவுக்குப் பிறகு இன்னுமொரு படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். அந்தப் படம் குறுகிய கால படமாக இருக்கும் என்றும், அதனை கே எஸ் ரவிக்குமார் இயக்கவே வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும்,ஈராஸே வெளியிடும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment