Tuesday, 4 November 2014

கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை - ஸ்வேதா பாசு


ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு தன்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது நடிகை ஸ்வேதா பாசு கையும், களவுமாக போலீசாரிடம் சிக்கினார். அவருடன் விபச்சார தரகர், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் சிலரும் சிக்கினர். ஆனால் அந்த தொழில் அதிபர்களின் பெயரை போலீசார் இன்றுவரை வெளியிடவே இல்லை. ஸ்வேதா பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் கழித்து காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் கூறுகையில்என்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை.

எனக்கு சினிமா துறையில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. நான் எதையும் கூறாமல் அவர்களாக எழுதிய பத்திரிக்கையாளர்களை தவிர வேறு யார் மீதும் நான் குறை கூற விரும்பவில்லை.

என் விளக்கத்திற்காக மீடியா காத்திருந்திருக்க வேண்டும் என்றார் ஸ்வேதா. அன்றாட செலவுக்கே பணம் இல்லாததால் சிலரின் தூண்டுதலின் பேரில் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தான் தள்ளப்பட்டதாக ஸ்வேதா தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. ஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கையும், களவுமாக சிக்கியதை ஸ்வேதா மறுக்கவில்லை.

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வேதாவை ஆளாளுக்கு விமர்சிப்பார்கள். ஆனால் ஆபாச பட நடிகையான சன்னி லியோனைய தலையில் வைத்து கொண்டாடுவார்கள் என்று பலரும் ஃபேஸ்புக்கில் விமர்சித்தனர்.


No comments:

Post a Comment