Friday, 7 November 2014

விஜய்யின் 59வது படம்



கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் அட்லி இயக்க உள்ள விஜய்யின் 59வது படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கத்திபட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது பெயரிடப்படாத சிம்பு தேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். ஹன்சிகாவின் அம்மாவாக ஶ்ரீதேவி நடிக்கிறார். நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு தேவிஶ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தற்போது விஜய்யின் 59வது படமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு இணையத்தில் வெளியான அட்லி , கலைப்புலி தாணு, மற்றும் விஜய்யுடன் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் 2016 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment