அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கிவரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜீத்திற்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்திருக்கிறார்கள். மேலும் விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
டான் மெகதூர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் 5 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் திரிஷாவிற்கு சோலோ பாடல் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனம் ஏற்கனவே அஜீத் நடித்த ‘மங்காத்தா’, ‘பில்லா-2’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது.
என்னை அறிந்தால் படத்தின் டிசேர் இன்று வெளியாகி பட்டையை கிளப்பிக்கொண்டிருகிறது.
No comments:
Post a Comment