Wednesday, 10 December 2014

உலகமெங்கும் 50 லட்சம் DVDகளில் வெளியாகும் சேரன் படம்


சேரன் புதுமுயற்சியாக சி2எச்’ (C2H) சினிமா டு ஹோம் என்ற திட்டத்தை தொடங்கி, அதன்மூலம், புதிய திரைப்படங்களை நேரடியாக டிவிடி மூலம் வீட்டிலிருந்தே கண்டுகளிக்கும் வசதியை உருவாக்கிக் கொடுத்தார். 

சமீபகாலமாக இந்த திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்த சேரன், வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி தனது ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கைபடத்தை சி2எச் திட்டத்தின் மூலம் வெளியிடவுள்ளார். 

உலகமெங்கும் இப்படத்தின் டிவிடிகள் 50 லட்சம் விற்பனையாகும் என்றும், அதன்மூலம் 50 லட்சம் குடும்பங்கள் இத்திரைப்படத்தை கண்டுகளிப்பர் என்றும் எதிர்பார்க்கிறார் சேரன். 

இதுபோல் தயாரிப்பாளர்களே தங்கள் படங்களின் ஒரிஜினல் டிவிடிக்களை தயாரித்து கொடுப்பதால், திருட்டு விசிடிக்கள் ஒழிய வாய்ப்பிருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

No comments:

Post a Comment