Friday, 12 December 2014

லிங்கா திரை விமர்சனம்


ஆரம்பமே அமர்க்களம் என்றுதான் சொல்லவேண்டும், முதல் காட்சியே மிரட்டலாக கிராபிக்ஸ் கலந்து மிரட்டியிருக்கிறார்கள். குழந்தைகள், இதயம் பலவீனமானவர்கள் பயந்தே போய்விடுவார்கள்.

ரஜினிகாந்த் அறிமுகம் அட்டகாசம் என்றுதான் சொல்லவேண்டும். முதல் பாதி அனுஷ்கா, சந்தானம், கருணாகரன் என்று ரஜினியுடன் பின்னி எடுக்க நல்ல வேகத்தில் படம் செல்கிறது. முதல் பாதி கொஞ்சம் கதையுடன் நல்ல நகைச்சுவையுடன் செல்கிறது.

இடைவேளையில் ஒரு திருப்பம் அதில் ரஜினி தான் யாரென்று தெரிந்து கொள்கிறார். பிறகு பிளாஷ்பேக் காட்சிகளில் தந்தை ரஜினியின் கதையுடன், சோனாக்ஷி சின்ஹா, அங்கேயும் நகைச்சுவையாக கதை நகருகிறது. 

பிற்பாதி கொஞ்சம் கனமான கதையம்சத்துடன் இருக்கிறது. அதனால் கதையை நாங்கள் கூறவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் தேவையான கதைதான். படம் இறுதியும் அட்டகாசம் என்றுதான் சொல்லவேண்டும்.

மொத்த கதையும் ரஜினி வழக்கம்போல் தன் தோளில் சுமந்துகொண்டு நம்மையும் திருப்தி செய்கிறார். ரயில் சண்டைக்காட்சியில் தான் சூப்பர்ஸ்டார் என்று நிரூபித்துவிட்டார், இது ஒரு இன்ப அதிர்ச்சிதான். பின்னணி இசையில் ரகுமான் மிரட்டலாக செய்துள்ளார். 

திரைக்கதையில் ரவிகுமாரின் அனுபவமும் நேர்த்தியும் அருமை. ரத்னவேலு அந்தகாலம், இந்தகாலம் என்று மெனக்கெட்டு நம்மை பரவசத்தில் ஆழ்த்திவிட்டார். 

மொத்தத்தில் “லிங்கா” ரஜினிக்கும், ரஜினி ரசிகர்கள் மட்டும் இன்றி பார்க்கும் அனைவருக்கும் முக்கிய படமாக இருக்கும்.  

தரமான கதையம்சம் கொண்ட மசாலா ரஜினி படம்...


3.75/5

No comments:

Post a Comment