சூப்பர் ஸ்டார் பட்டதிற்கு வரும் போட்டி குறையவேயில்லை மீண்டும் மீண்டும் விஸ்வருபம் எடுக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டதிற்கு தமிழ் சினிமாவில் என்றும் போட்டி தான். இந்த இடத்திற்கு கடும் போட்டியில் இருப்பது அஜித் மற்றும் விஜய் தான். குமுதம் நாளிதழ் விஜய்யை சூப்பர் ஸ்டார் என அறிவித்தவுடன் தமிழகம் முழுவதும் பற்றிக்கொண்டது தீ.
கடைசி நாள் வரை ஓட்டெடுப்பில் அஜித் முன்னிலையில் இருக்கும்போது ராவோடு ராவாக விஜய் எப்படி முதலிடம் பிடித்தார் என அஜித் ரசிகர்கள் போர்க்கொடி உயரத்த, விஜய்யிடம் இருந்து சில லட்சங்கள் குமுதம் நாளிதழுக்கு கை மாறியதாக ஊடங்கங்கள் செய்திகள் வெளியிட்டன.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்த சண்டை சமூக வலைதளங்களில் தீப்பற்றி எரிந்தன. தற்பொழுது மீண்டும் ஒரு நாளிதழ் அடுத்த சூப்பர்ஸ்டார் அஜித் தான் என சில உண்மை பூர்வமான, தகுதி வாய்ந்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளன.
அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் தான், ரஜினியின் அனைத்து நல்ல குண நலன்களும் அவரிடம் உள்ளது. ரசிகர்களின் நலனுக்காக ரசிகர்மன்றகளை களைத்தார். இருப்பினும் அதெல்லாம் நீங்க எதுக்கு சொல்லுறீங்க என, அஜித் ரசிகர்கள் அஜித்தை கையில் வைத்து தாங்கி வருகின்றனர். தலைக்கு ஒன்று என்றால் தனக்கு வந்தது போல் துடிக்கின்றனர். இவரின் ஆரம்பம், வீரம் படமும் ரூ 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.
முதல்வரின் புகழ்பாடி படங்களை ரிலீஸ் செய்யும் இந்த சினிமா உலகில், ஒரு முதலமைச்சரின் முன்னிலையிலேயே அவருடைய தவறை மேடையில் சுட்டிக்காட்டினார் அஜித். அஜித்தின் தைரியமிக்க பேச்சை கேட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே எழுந்து நின்று கை தட்டினார்.
சூப்பர் ஸ்டாரே அஜித் தான் அடுத்த சுப்பர் ஸ்டார் என அங்கீகரித்த பின்னர் எதற்கு வீணாக ஓட்டெடுப்பு என அந்த கட்டுரை முடிகின்றது.
நன்றி வண்ணத்திரை
No comments:
Post a Comment