‘‘நான் பொதுவாக இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படத்தின் இயக்குனர் ராஜா விழாவில் கலந்த கொள்ள வந்து கூப்பிட்டார். ஒரு முறைக்கு 10-முறை அழைத்தார். ஒருமுறை வந்து கூப்பிட்டாலே வந்து விடுவேன் என்று அவரிடம் கூறிவிட்டு விழாவிற்கு வந்தேன்.
ரூ 30 கோடி என்னைப் பற்றி இங்கு பலர் புகழந்து பேசினார்கள். எனது சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் எனக்கு விருதுடன் 30 கோடி ரூபாய் பணமும் கிடைத்தது. அந்த பணத்தை அங்குள்ள தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை செய்தேன். அது நான் சம்பாதித்த பணம் அல்ல. மேலும் எனக்கு குழந்தைகள் இல்லை. ஆகவே, நான் அதை நன்கொடை செய்தேன்.
இந்த நேரத்தில் எனது அம்மா சொன்ன அறிவுரைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அவர், ‘வாழ்க்கையில் பேராசை கூடாது. ஒரு நாளைக்கு ஒரு உயிருக்காவது உதவி செய்ய வேண்டும். சம்பாதிக்கிற பணத்தில் 10-ல் ஒரு பங்கை நல்ல காரியங்களுக்கு செலவழிக்க வேண்டும்' என்றார். எனது அம்மா சொன்னதை நான் கடைபிடித்து வருகிறேன். பென்சன் பணம் நான் ஓய்வு பெறும்போது எனக்கு 10 லட்சம் ரூபாய் கிடைத்தது. எனக்கு குழந்தை இல்லாததால் அந்த பணத்தை நன்கொடை செய்தேன்.
எனக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி, 'எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பா தான் இல்லை. ஆகவே, பாலம் கல்யாணசுந்தரத்தை தந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறேன்' என்று கூறினார்.
குழந்தைகள் இல்லாத நான் நன்கொடை செய்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால், குழந்தைகள் உள்ள ஒருவர் இது போல் நன்கொடை செய்துள்ளார். ஆனால், அவர் பெயர் வெளியே தெரியவில்லை,'' இவ்வாறு பாலம் கல்யாணசுந்தரம் உரையாற்றினார்.
No comments:
Post a Comment