கடந்த வாரம் வழக்கம் போல பிரபல சர்ச்சை
இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு சர்ச்சையான கருத்தை தனது ட்விட்டர் தளத்தில்
வெளியிட்டார். அதாவது “ ஐ படத்தின் டிரைலர் பார்த்தேன் கண்டிப்பாக இது ரஜினிகாந்த்
நடித்த ‘லிங்கா’ படத்தின் முதல் நாள் வசூலைவிட அதிகமாக செய்யும்,
மேலும் ஐ டிரைலர் பார்க்கும்போது ரஜினிகாந்த்
மற்றும் ஜெயலலிதா விட மேன்மையானவர்” என்று குறிப்பிட்டார். இதற்கு ரஜினிகாந்த்
மற்றும் அ.தி.மு.க ஆகிய தரப்பில் பலத்த அதிருப்தி நிலவியது.
சமிபத்தில் மும்பையில் நடந்த விழாவில் இந்த
சர்ச்சை குறித்து இயக்குனர் ஷங்கரிடம் கேள்வி கேட்டபோது “ஐ டிரைலர் குறித்து
கருத்து தெரிவித்ததில் சந்தோஷம் ஆனால் ஆனால் ரஜினிகாந்த் மற்றும் ஜெயலலிதா விட
சிறந்தவனா என்ற கருத்துக்கு என்னிடம் பதில் இல்லை” என்று அடக்கமாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment