Tuesday, 2 December 2014

டி.என்.பி.எஸ் 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


டி.என்.பி.எஸ் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழுக்க, முழுக்க பெண்களுக்கான வேலைவாய்ப்பான இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

மொத்த இடங்கள்: 117

கல்வித்தகுதி: ஊட்டச்சத்து, ஹோம் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது கிராமப்புற அபிவிருத்தி குறித்த பிரிவில் முதுநிலை பட்டத்தினை காந்திகிராம பல்கலைகழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்ச்சி அளிக்கப்படும்.

சம்பள விகிதம்: 9300/- முதல் 34800/- வரை + 4500/- தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு + நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சியின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26, 2014

No comments:

Post a Comment