Friday, 5 December 2014

விஜய் 22ஆண்டு கால சினிமா


இன்று ரசிகர்கள் நெஞ்சில் இளையதளபதியாக இருக்கும் விஜய் கடந்து வந்த பாதை மகத்தானது சுலபமானது அல்ல. ஆரம்பத்தில் விஜய் நடித்த அதனை படங்களும் தோல்வி என்றால் பார்த்துகொள்ளுங்கள். நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வெற்றி', 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.  1984ல் 'வெற்றி' படம் ரிலீஸ் ஆனது. அப்படிபார்த்தால் விஜய் சினிமாவுக்கு நடிக்கவந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.
1992ல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனத்தை நடிகர் விஜய் சந்தித்தார். அதற்குப் பிறகும் தொடர்ந்து அப்பாவான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படங்களிலேயே நடித்தார்.
1996ல் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் 'பூவே உனக்காக'. இதுதான் நடிகர் விஜயின் முதல் வெற்றிப்படம் என்றால் அது மிகையாகது. இந்தப் படம் விஜய்யை பட்டி தொட்டியெங்கும் நன்கு அடையாளப்படுத்தியது. அதனால் தொடர்ந்து காதல் படங்களிலேயே விஜய் நடித்தார்.
'லவ் டுடே', 'காதலுக்கு மரியாதை', 'நினைத்தேன் வந்தாய்', 'துள்ளாத மனமும் துள்ளும்' ஆகிய படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்தன. இளைஞர்கள் மத்தியில் விருப்பமான நடிகராக மாறினார்.
பிறகு தொடர்சியாக நடிகர் விஜய் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின. பிறகு 'குஷி', 'பிரியமானவளே', 'ப்ரெண்ட்ஸ்', 'ஷாஹகான்', 'யூத்' என்று நடித்துக்கொண்டிருந்த விஜய் திடீரென ஆக்‌ஷன் பாதைக்கு மாறினார். 'பகவதி' , 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி' ஆகிய படங்கள் விஜய்க்கு ஆக்‌ஷன் ஹீரோ அடையாளத்தைக் கொடுத்தன.
'செந்தூரப்பாண்டி' படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்தார் இது வெற்றிப்படமாக அமைந்தது.  'ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய்யுடன் இணைந்து அஜித் நடித்தார். 'நேருக்கு நேர்', 'ஃப்ரெண்ட்ஸ்' படங்களில் விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். 'ஒன்ஸ்மோர்' படத்தில் நடிகர் திலகம் சிவாஜியும், விஜய்யும் நடித்தனர்.
ஏப்ரல் 14, 2005ல் ரஜினி நடித்த 'சந்திரமுகி' ரிலீஸ் ஆனது. அதே நாளில் விஜய்யின் 'சச்சின்' படமும் ரிலீஸ் ஆனது ஆனால் துரதிர்ஷ்டவசமாக சச்சின் படம் தோல்வியைத் தழுவியது.
'போக்கிரி', 'வேட்டைக்காரன்' என முழுக்க முழுக்க கமர்ஷியல் பக்கம் கால் பதித்த விஜய் 'காவலன்' படத்தில் அமைதியான ஃபெர்பார்மராக நடித்து அப்ளாஸ் அள்ளினார்.
'நண்பன்', 'துப்பாக்கி', 'கத்தி' என படத்துக்குப் படம் வித்தியாசமான கதைக்களங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்திவருகிறார்.
ஒரு நடிகனாக விஜய் விருதுகளை வென்றிருக்கிறார். அதே சமயம்சில பல சறுக்கல்களையும்  சந்தித்திருக்கிறார். தோல்விப்படங்களைக் கொடுத்திருக்கிறார். ஆனாலும், விஜய்யின் அசைக்க முடியாத தன்னம்பிக்கைதான் ரசிகர்கள் இளையதளபதி என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.விஜய்க்கு இது 58வது படம். “ராஜாராணி” இயக்குனர் அட்லி இயக்கத்தில் 59வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த வெற்றிப்பயணம் தொடர OnlineArasan குழு சார்பாக வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment