ஆடி
மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்.
எதிர்காலத்தை திட்டமிடுவதில் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அந்த கற்பனைகளை
செயல்படுத்துவதற்காக என்னென்ன வித்தைகளை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள்.
கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறகுவர்கள்.
இந்த மாதத்தில் பிறந்த ஆணோ, பெண்ணோ யாராகஇருந்தாலும் திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் இவர்கள்
காட்டும் பாசத்தை வேறு யாராலும் காட்ட இயலாது. குடும்பத்தின் மீதுள்ள பாசத்தை
மனதிற்குள் வைத்துக்கொண்டு, பெற்றவர்களிடமோ மற்றவர்களிடமோ
காட்ட மாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏதேனும் மொழி மீது அதிக
விருப்பம் இருக்கும். இந்த மாதத்தை கடக மாதம் என சொல்வதுண்டு. கடகத்திற்குரிய
சின்னமான நண்டைப்போல இவர்கள் மற்றவர்களை பேச்சில் கடித்தும் விடுவார்கள்.
அதே
நேரம் முன்னெச்சரிக்கையாக ஒதுங்க வேண்டிய நேரத்தில் நண்டு ஓடி ஒளிந்துகொள்வது போல
மறைந்தும் கொள்வார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணம் ஈட்ட வேண்டுமென்று
திட்டமிட்டு அதை மட்டும் செயல்படுத்துவதில் இறங்கிவிட்டால் இவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. அதேநேரம் பணம் நம்மைத் தேடி வரட்டும் என இருந்துவிட்டால்
பிற்காலத்தில் மிகவும் நொந்துகொள்ள வேண்டிவரும். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால்
பழைய தலைவர்களுக்கு சிலை எடுத்தே சம்பாதித்து விடுவார்கள்.
இவர்களை யாராவது
திட்டினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதே நேரம் யானையைப் போல மனதில்
வைத்துக்கொண்டு மறக்கமாட்டார்கள். இவர்களிடம் ஞாபகசக்தி அதிகம். இவர்களுக்கு ஒரே
ஒரு அறிவுரையை சொல்லியாக வேண்டும். இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால்
அவர்களுடன் மிக அதிகமான நட்பு கொண்டுவிடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு
ஏற்பட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது போல விரக்தியின் உச்சத்திற்கு
சென்றுவிடுவார்கள்.
இவ்வாறு செய்யாமல் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து
கொண்டால் வாழ்க்கையில் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆடி மாதத்தில்
பிறந்த பெண்களால் பெற்றோர்கள் மகிழ்ச்சி குறைந்தே இருப்பார்கள். எனவே இந்த
மாதத்தில் பிறந்த பெண்கள் பெற்றவர்கள் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால்,
வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.
No comments:
Post a Comment