குளிர்ந்த
மாதமான மார்கழியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் தனித்தன்மையுடன் இருக்க
வேண்டும் என விரும்புபவர்கள். ஒரு காரியத்தை துவங்கினால் அதை முடிக்காமல் தூங்க
மாட்டார்கள். இவர்களுக்கு அரசியல், ஆன்மிகம், தத்துவம், அரசு பணிகளில் நிர்வாகம் போன்ற உயர்பணிகள்
ஏற்றவை. இதில் ஈடுபட்டால் இவர்களால் செல்வத்தை குவிக்கமுடியும். ஆடம்பரத்தில்
இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். சம்பாத்தியம் குறைவாக இருந்தாலும் அதிகமாக
செலவழிக்க வேண்டும் என விரும்புவார்கள்.
இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையின்
பின்பகுதியில் சிரமப்படுவார்கள். எனவே இவர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டு
எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நடந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஒரு சைக்கிளில்
சென்றால்கூட வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே நேரம் பெரிய
பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் அப்படியே இடிந்து போவார்கள். இந்த நேரத்தில்
இறைவனை வணங்கி அமைதியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
சிறந்த எழுத்தாளர்களாகவும்
இவர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் முக்கியமான எதைப்பற்றியாவது
எழுதினால் அது உலகின் தலைவிதியையே மாற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த
மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட
சிநேகிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கெட்டவர்களுடன் சேர்ந்து மோசமான
உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் வாய்ப்பு அதிகம்.
இதற்காக பின்னால் மிகவும்
வருத்தப்படுவார்கள். அதேநேரம் படிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள்.
இவர்களுக்கு திருமணத்தில் அதிக விருப்பம் இருக்காது. அதேநேரம் ஆண்கள் பெண்
நண்பர்களுடனும், பெண்கள் ஆண் நண்பர்களுடனும் வாழ்வதற்கு
பிரியப்படுவார்கள். மொத்தத்தில் சுதந்திரமான வாழ்க்கையை இந்த மாதத்தில் பிறந்த
பெண்கள் விரும்புவர். எனவே பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் வாழ்க்கை
இனிமையாக அமையும்.
No comments:
Post a Comment