மாசி
மாதத்தில் பிறந்தவர்கள் முன்கோபக்காரர்கள். குழந்தைகள் அதிகம் பிறக்காது.
இவர்களிடம் யாராவது உண்மையை மறைத்தால் அதை அறிந்துகொள்ளும் வல்லமை உடையவர்கள். விஞ்ஞானத்தில்
ஆர்வம் உண்டு. எதை எந்த வேளையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து
திட்டமிட்டு காரியம் செய்யக்கூடியவர்கள். இவர்களில் சிலர் பிறந்த ஊரில் சிலகாலம்
தான் இருப்பார்கள். பின்பு பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று
விடுவார்கள்.
கஷ்டப்பட்டு பொருள் சம்பாதிப்பார்கள். இவர்கள் தங்களைத் தாங்களே
அழகில் சிறந்தவர்களாக எண்ணிக்கொண்டு கர்வத்துடன் நடப்பார்கள். இந்த எண்ணத்தை
மாற்றிக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் காதல்
திருமணத்தில் ஆர்வம் உள்ளவர்கள். புகுந்த வீட்டில் இவர்கள் செல்வ செழிப்புடன்
வாழ்வார்கள்.
கணவனை கைக்குள் வைத்திருப்பார்கள். இவர்கள் அனைவருடனும் சகஜமாக
பழகும் தன்மை கொண்டவர்கள். எனவே ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களை
நேசிப்பார்கள். அடிக்கடி வீட்டிற்கு உறவினர்களும் நண்பர்களும் வருவார்கள் என்பதால்
வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் ஆடம்பர பொருட்களை வாங்கவும் ஆசைப்படுவார்கள்.
இதனால் அதிகச் செலவுகள் ஏற்படும்.
இதைத் தவிர்த்து தங்கள் வருமானத்திற்கு
ஏற்றவகையில் பொருட்களை வாங்கிக் கொள்வது எதிர்கால சேமிப்புக்கு உதவும். தங்கள்
இஷ்டப்படிதான் எதுவும் நடக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து இவர்கள்
மாறுபட்டவர்கள். அடுத்தவர்களை அனுசரித்து செல்வார்கள். தொழிலில் அதிக அக்கறை
காட்டும் குணம் இவர்களிடம் உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வெங்கடாசலபதியையும், பத்ரகாளியையும் வணங்கிவந்தால் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் விலகும்.
இந்த
மாதத்தில் பிறந்த குழந்தைகளிடமும் புத்திசாலித்தனமும் ஆரோக்கியமும் உண்டு.
கல்வியில் ஆர்வம் இருக்கும். தங்களுக்கு சம அந்தஸ்தில் உள்ள குழந்தைகளிடமே
பழகுவர்.
No comments:
Post a Comment