உலகம் முழுக்க அதிக எதிர்பார்க்களுக்கு மத்தியில்
சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும்
கேலக்ஸி எஸ்7 எட்ஜ்
கருவிகளை அந்நிறுவனம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ்
விழாவில் அறிமுகம் செய்தது. இது அனைவரும் அறிந்த நிலையில் சாம்சங் நிறுவனம் இதே
கருவிகளின் ஆடம்பர எடிஷன் கருவிகளை வெளியிட இருப்பதாகவும் இதற்கான முன்பதிவுகள்
விரைவில் துவங்க இருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர மாடல்களை தயாரிக்கும் ட்ரூலி எஸ்குசிட் நிறுவனம்
கேலக்ஸி எஸ்7 மற்றும்
கேலக்ஸி எஸ்7 எட்ஜ்
கருவிகளை 24 கேரட் மற்றும் 18 கேரட் தங்கம் மற்றும்
ப்ளாட்டினம் கொண்டு தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது
இந்த ஸ்மார்ட்போன்களின் துவக்க விலை ரூ.1.62
லட்சம்
என்றும் இவை ஆடம்பர மரத்தால் செய்யப்பட்ட பெட்டியில் வழக்கமான அக்சஸெரிகள் மற்றும்
சாம்சங் கியர் விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட் கொண்டிருக்கும். இதோடு இந்த
பெட்டியில் வயர்லெஸ் சார்ஜிங் பேட் வழங்கப்படும் என்றும் இந்த கருவியின்
கட்டணத்தில் 5 சதவீதம்
உலகம் முழுக்க இயங்கி வரும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்7 கருவியில் 5.1
இன்ச்
திரை, ஸ்னாப்டிராகன்
820 பிராசஸர் / ஆக்டா கோர் எக்ஸைனோஸ் 8 ஆக்டா 8890
எஸ்ஓசி, 4
ஜிபி
ரேம், 32 /64 ஜிபி இன்டர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக
நீட்டிக்கும் வசதி, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
போன்ற அம்சங்களும் 3000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியில் 5.5
இன்ச்
திரை மற்று்ம 3600 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள்
கேலக்ஸி எஸ்7 போன்றே
வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment