mobileadvertisingwatch
நாம் விரும்பும் சில அறிய பொருட்கள் Amazon/eBay கிடைக்கும் ஆனால் நாம்
முதலில் தேடிப்பிடித்து விலையைப் பார்த்தால் அந்த பொருள் வாங்க வேண்டும் என்ற
ஆசையே போய்விடும். பிறகு நாம் வேறு ஏதாவது வழியில் அந்த பொருளை வாங்கிவிடுவோம்.
இதே Amazon/eBay ல் நாம் விரும்பிய பொருளை நாம் விரும்பிய விலை அல்லது
அதற்கும்கூட குறைவாக வாங்கமுடியும். ஆனால் அதற்கு சிறிது பொறுமை அவசியம்.
உங்களுக்கு பொறுமை இருந்தால் லாபம் உங்களுக்குத்தான்.
சரி குறைந்த விலையில் நாம் விரும்பும் பொருளை வாங்கும் வழியைப் பார்ப்போம்.
உங்களுக்கு தேவைப்படும் பொருள் Amazon/eBay ல் இருக்கிறதா என்று பாருங்கள்,
அப்படி தேடும் பொருள் இருந்து விலை அதிகமாக நீங்கள் கருதினால் அந்த பொருள் பெயர்,
வகை குறித்துவைத்துக்கொண்டு மீண்டும் கூகிள்(Google) ல் தேடுங்கள்.
இப்போது நீங்கள் தேடிய அதே பொருள் அதே வகை சற்று குறைந்த விலையில் இருப்பதை
நீங்களே பார்க்கலாம். இதேபோன்று தினமும் ஒரு முறை மட்டும் தேடிப்பார்த்து
விட்டுவிடுங்கள். மூன்றாவது நாள் அல்லது நான்காவது நாள் கண்டிப்பாக நீங்கள்
எதிர்பார்க்கும் விலையில் நீங்கள் விரும்பிய பொருள் கண்டிப்பாக Amazon/eBay ல்
கிடைக்கும்.
இது எப்படி சாத்தியம் என்றால் Amazon/eBay தளமானது, வாடிக்கையாளர்கள் கடையில்
பேரம் பேசி வாங்கும் முறையை தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் நீங்கள் ஒவ்வொரு முறை தேடும்போது விலை சற்று குறைத்து காட்டுகிறது
அமேசான்/eBay தளம்.
எச்சரிக்கை :
நீங்கள் தேடும் அதே பொருளை நிறைய பேர் தேடினால் கண்டிப்பாக விளையும் அதிகமாகவே
காட்டும் கவனம் தேவை.
No comments:
Post a Comment