Wednesday, 19 November 2014

ஆன்ராய்டில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை


ஆன்ராய்டு ஸ்மார்ட்போனின் RAM பிரச்சினை

ஆன்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பல பேருக்கு பெரும் தலைவலியாக இருப்பது ராம்(RAM) பிரச்சினைதான். இந்த போன்களில் அதிகபட்சமாக 3GB அளவிற்கு ராம் இருந்தால் மட்டுமே பயன்படுத்த அருமையாக இருக்கும். ஆனால் இதற்குமாறாக பெரும்பாலான போன்கள் வெறும் 512MB அளவிற்குத்தான் இருக்கும்போது பின் எப்படி பயன்படுத்த நன்றாக இருக்கும். அதிலும் கேம்(Game) விளையடுவோரின் பாடு திண்டாட்டம்தான், இரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக புலம்புவார்கள்.

ஐபோனில் 1GB போதும்

ஆனால் இதற்கு நேர்மாறாக ஐபோனில் வெறும் 1GB ராம் இருந்தாலே போதுமானது, பயன்படுத்த அருமையாக இருக்கும் பெரும்பாலான கேம்களை எந்த பிரச்சினையும் இன்றி விளையாடலாம்.

பிரச்சினையின் மூலாதாரம்

ஆன்ராய்டு போன்களில் ஜாவா(JAVA)வில் இயங்குகிறது. இதில்தான் பிரச்சினை, ஜாவா மொழியானது தானாகவே பயன்படுத்தாமல் இருக்கும் மெமரி(Memory)யை சேமிக்கும் அம்சத்துடன் வருகிறது, இதற்கு அதிக ராம் தேவைப்படும், இதற்கு அதிகபட்சமாக எட்டு மடங்கு ராம் இருக்கவேண்டும் அப்படியில்லையென்றால் போன்கள் மெதுவாக வேலை செய்யும் அல்லது வேலை செய்யாமல் நின்றுவிடும்(Hang). ஆனால் ஐபோனில் பயன்படுத்தும் iOS-யில் இந்த அம்சமானது பயன்படுத்துவது இல்லை, இதனால் ஐபோனிற்கு அதிக ராம் வேண்டும் என்ற அவசியம் இல்லை, 1GB ராமில் நன்றாகவே வேலை செய்கிறது.

மேம்படுத்தப்பட்ட ஆன்ராய்டு 5.0(லாலிபாப்)


சமிபத்தில்தான் இந்த பிரச்சினையினை கூகிள்(Google) நிறுவனம் கண்டுபிடித்தது. இனிவரும் போன்களில் அதாவது ஆன்ராய்டு 5.0(லாலிபாப்) செயல்படும் ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்சினை இருக்காது. ஆன்ராய்டு 5.0(லாலிபாப்) போன்கள் வெறும் 512MB ராம் போதுமானது. செயல்படாமல் நின்றுபோதல், தாமதமாக செயல்படுதல் போன்ற பிரச்சினைகள் இனிமேல் ஆன்ராய்டு இருக்காது என்று நம்பலாம்.

No comments:

Post a Comment