5
எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – புதன் (Mercury)
இந்த எண்
அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண்
பொதுவாக உள்ளது. மிக நன்மையும்,
அதிர்ஷ்டமும் தருவது இந்த
எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக்
கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத்
தரவல்லது! இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி
அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள்
(அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல அமைப்புடனும், வலுவுடனும் அன்பர்களுக்கு
இருந்தால் தான் நன்மை புரியும். இல்லையெனில் தீய பலன்களைக் கண்டிப்பாக
கொடுத்துவிடும். உதாரணமாக 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 24, 33, 42, 51 ஆகிய 6 எண்ணின்
வர்க்கங்கள் எந்த ஒரு பலனையும் கொடுக்காது. அதுமட்டுமன்று, அவர்களை
நிச்சயம் பல தோல்விகளையும் வேதனைகளையும் ஆழ்த்திவிடும். ஆனால் 5 மட்டும்
யாருக்கும் தீமை புரியாது!
சோதிட
சாத்திரத்தல் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு மட்டும் எல்லா இராசி வீடுகளிலும்
சமமாகவும், நட்பாகவும் (விருச்சிகம் தவிர) சொல்லப்பட்டுள்ளது! அதனால்தான்
சந்திரனின் ஆதிக்கம் ஜாதகத்தில் பொதுவாக எல்லா இராசிகளுக்கு நன்மையான பலன்களையே
கொடுக்கும். கோசார பலன்களும் சந்திரனின் நிலையையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஆனால் எண்கணிதத்தில் 5ம் எண்ணே அத்தகைய ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண் வரிசையில் 5ம் எண்ணே மற்ற எண்களுக்கும்
நடுவில் அமைந்துள்ளது என்பதே இதன் சிறப்புக்கும், நற்பலன்களுக்கும் காரணம். மற்ற
எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும்போது
இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாக எடுத்துக் கொள்வார்கள்.
5ஆம் எண்காரர்களின் புத்தி அதாவது அறிவு மிகவும் அற்புதமானது!
ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் (!) பிரஞ்சத்திலிருந்து இவர்களுக்குத்
தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், செயல்திறனுக்கும்
பெயர் பெற்றவர் விஷ்ணு பகவான்தான்! அவரின் முழுக்கடாட்சமும் பொருந்திய எண் இதுதான்
(5 எண்). மற்ற எண்காரர்களைக் காப்பதற்காகவே (விஷ்ணுவின் தொழில்
மக்களைக் காத்தல் அல்லவா), 5ம் எண்ணின் பலம் உதவுகிறது! 9 எண்கள் வரிசையில் எந்த ஒரு
கிரகத்தினருக்கும் இல்லாத ஒரு கவர்ச்சி (காந்த சக்தி) இந்த 5ம் எண்
நபர்களுக்கு உண்டு! எனவேதான் இந்த எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண்
என்று கூறவாக்£ள். காந்தமானது,
எந்த அளவு இரும்பினையும், எளிதாக இழுத்து
விடும் தன்மை உடையது. அதேபோன்றே,
மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு
நிகர் எவரும் இலர். இவர்களுக்கு அடுத்த நிலையில்தான் 6ம் எண்காரர்கள்
உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கும் ஜனவசியம் இயற்கையாக உண்டு!
இவர்களது
பேச்சில் கேலியும் (அடுத்தவ¬ப் புண்படுத்தாமல்) கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும்.
எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும்,
தங்களது தனித்தன்மையை (Presence) அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள். பல வருடகாலம்
நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும்
இந்த 5 எண்காரர்களுக்கு உண்டு. மேலும் இவர்களுக்கு காரில், ரயிலில், விமானத்தில், அடுத்த ஊரில், அடுத்த
நாட்டில் எதிர்பாராத நண்பர்களும்,
அவர்களின் மூலம் நட்பு மற்றும்
பரஸ்பர உதவியும் எளிதில் இவர்களுக்குக் கிடைத்துவிடும். எப்போதும் எடுப்பாகவும், அழகாகவும், ஆடைகளையும், அழகு
சாதனங்களையும் அணிந்து கொள்ளும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக்
கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும்
என்று துடிப்பார்கள்.
இவர்கள்
சாப்பிடுவதில் வேகமாக இருப்பார்கள். பேச்சிலும் நடையிலும் வேகம் உண்டு! பார்வைக்கு
எளிமையாக இருந்தாலும் அரசர்களையும் கவர்ந்து விடுவார்கள். பிறர் முறையாகக்
கணக்குகள் எழுதி வைத்துக் கொள்ள நினைக்கும் விபரங்களையும்கூட இவர்கள் மனதிலேயே
நிலையாக வைத்துக் கொள்ளவும். விரும்பிய போது அவைகளை சரியாக எடுத்துக்காட்டியும்
சொல்லுவார்கள். எப்போதுமே பெரிய மனிதர்களின் ஆதரவு இவருக்கு உண்டு. தங்களது
சொந்தப் படைப்புக்களைவிட அடுத்தவர்களின் கருத்துக்களையும், விஷயங்களையும்
தொகுத்து அவைகளை ஆராய்ந்து முடிவுக்கு வரும் அறிவுத் துறைகளில் இவர்கள் சிறப்பாக
விளங்குவார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களில் கவனம் செலுத்துவம் அஷ்டாவதானிகள்
இவர்கள்தான். புகழ்பெற்ற உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியர், மெஸ்மரிசம் கண்டுபிடித்த மெஸ்மர்
போன்றவர்களெல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே!
No comments:
Post a Comment