8
எண் 8 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சனி (saturn)
மனிதர்கள்
எப்போதும் இன்பத்தையே தேடி ஓடுகிறார்கள். “சுவையாக இருக்கிறது” என்று அதிகமாக
இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு,
அதன் பின்பு செரிமாணம் ஆகாமல், வயிறு
சரியில்லை, சர்க்கரை நிலை உடம்பில் ஏறிவிட்டது என்று தவிப்பவர்கள்தான் இன்றைய உலகில்
அதிகம்! அரிய நெல்லிக்கனியானது சாப்பிடும்போது கசக்கும். ஆனால் சாப்பிட்ட பின்பு
மிகவும் இனிக்கும். மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும் இந்தக் கனி மிகவும்
சிறந்தது! இருப்பினும் நெல்லிக்கனியைச் சாப்பிடும்போது கசப்பு என்ற
காரணத்திற்காகப் பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை! அது மட்டுமன்று மனிதன் மற்ற
எல்லாவற்றையும்விடத் தன் நாக்கிற்கே அடிமையாக இருக்கிறான்! நினைத்துப் பாருங்கள்!
தொண்டைக்குக் கீழ் எந்த உணவுப் பொருள்கள், பானங்கள் சென்றாலும் ஒன்றுதான்.
நாக்கிற்கு
கீழே சென்றுவிட்டால், எந்தப் பொருளுக்கும் எந்தச் சுவையும் இல்லை! இருப்பினும் மக்கள்
தங்களின் உடல்நலம் பாராது நாக்கின் சுவைக்காகவே ருசியாகச் செய்து
சாப்பிடுகிறார்கள். மக்களின் இரசனைதான் என்னே? அதைப் போன்றே மற்ற 8 எண்களும், மனிதனை
தூண்டிவிட்டு அவனை இகலோக … வாழ்க்கையில் சுகங்களில் ஆழ்த்தி விடுகிறது! மனிதனும் தனக்கு யோகம்
வந்துவிட்டது என்று மகிழ்கிறான்! ஆனால் சனிபகவான் ஒருவர்தன் மற்ற கிரகங்களின்
தன்மையைக் கவர்ந்து ஒருவன் மற்ற ஜென்மம் வரை தொடர்ந்து செய்த வினைகளை ஆராய்ந்து, அவனது
செயல்களுக்கு ஏற்ப முதலில் தீய பலன்களையும், பின்பு நல்ல பலன்களையும் தவறாமல்
கொடுத்துவிடுகிறார்! மற்ற நவக்கிரகங்களைப் போல், சனீசுவரரை ப்ரீதி செய்து, எளிதில் இவரது
தண்டனையிலிருந்து தப்ப முடியாது! 8&ஆம் எண்ணில்
பிறக்கும்போதே, மனிதன் விதியில் வசப்படுகிறான், 8&ம் எண் பிறவி
எண்ணாக வரும் போது.
வாழ்க்கையில்
கடும் போராட்டத்தையும், உடலில் அல்லது மனத்தில் ஏதாவது சிறிய நோயையும் கொடுத்து விடுகிறத.
ஆனால் விதி எண்ணாக வரும்போது,
அவனது முயற்சிகளையும், ஊக்கத்தையும்
தனது காலத்தில் (30 வயதுக்கு மேல்) கொடுத்து அவனைத் தடுமாற வைத்து விடுகிறது! அவனது
சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் அனைவரிடமும் கெட்ட பெயர் அல்லது அவமானம் அடைய
நேரிடுகிறது! பின்பு அவனை தன்வழியே போராடும் குணத்தை 8 எண் வாரி
வழங்குகிறது! புதிய சூழ்நிலை,
புதிய மனிதர்கள், புதிய ஊர்
என்று ஒரு புதிய அற்புத வழியைத் திறந்து விடுகிறது! எனவே மக்களும், தங்களது
கடுமையான உழைப்பால் வாழ்க்கையின் உச்சியை 45 வயதுக்கு மேல்
எப்படியும் அடைந்து விடுகிறார்கள்.
இதுவே அனுபவ
உண்மை ஆகும். பள்ளியில் தனது போதனையாலும் தேவைப்பட்டால் தண்டனையாலும் ஒரு மாணவனைச்
சீர்திருத்தும் ஆசிரிய¬ப் போன்றவரே சனீசுவரராவார். எனவே 8ம் எண் விரும்பத் தக்கதேயன்றி
வெறுக்கத்தக்கதன்று! சில அன்பர்கள் கோடீசுவரர்கள் குடும்பத்தில்
பிறந்திருப்பார்கள். இவர்கள் என்னதான் வசதி மிகுந்த நிலையில் வாழ்ந்திடினும், வண்டுகள்
துளைத்த மாங்கனியைப் போல் உள்ளக் குடைச்சல்கள் நிறைந்தவர்கள்! மனத்தில் ஏதாவது ஒரு
சோகத்தையும், வியாதியையும் வைத்துக் கொண்டு, மனதில் நிம்மதியில்லையே என்று
அலைவார்கள். “பாசமாவது ஒன்றாவது. அது வீதயில்தான் கிடைக்கிறது” என்று
புலம்புவார்கள். ஏதாவது ஒரு பெரிய குறை அல்லது குறைபாடு மனதை அரித்துக்கொண்டே
இருக்கும்.
குழந்தையில்லை, மனைவியால்
இன்பமில்லை. நண்பனால் சுகமில்லை என்று எதையாவது நினைத்துத் தங்களை வருத்திக்
கொள்வார்கள். வாழ்க்கையினை வெறுத்து முதியோர் இல்லம், ஆன்மீக மடங்கள், அனாதை
இல்லங்கள் ஆகியவற்றில் இருப்பவரும், அதனை ஆரம்பிப்பவரும் 8ஆம்
எண்காரர்களேயாகும். “எட்டாவது பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த இடமெல்லாம் குட்டிச்
சுவர்” என்பது பழமொழி. மக்களும் 8, 17, 26 ஆகிய தேதிகளைக்
கண்டுதான் பயப்படுகிறார்கள். எந்த ஒரு நற்காரியத்தையும் தவிர்த்து விடுகிறார்கள். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், &ம் எண்ணை விதி
எண்ணாக உடையவர்களும் 9&ம் எண்ணில் தங்களது பெயரை உடையவர்களும், தங்களது
வாழ்வில் பல தோல்விகளையும், வேதனைகளையும்,
சில அவமானங்களையும் சந்தித்தே
ஆகவேண்டும் என்பதே 8&எண் கூறும் வாழ்க்கை நியதி! 8&ஆம் எண்ணில்
பிறந்த அதிர்ஷ்டசாலிகள் (சனி வலிமை நல்ல நிலையிலிருந்தாலும்) பெருத்த
தனவான்களாகவும், பல்வேறு தொழில்களை உடையவர்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள்!
தியாகிகளாகவும், அருளாளர்களாகவும், சிறந்த
நீதிபதியாகவும், பேராசிரியர்களாகவும், அமைச்சர்களாகவும், உயர்
அதிகாரிகளாகவும், கோடீஸ்வரார்களாகவும் இருப்பார்கள். ஆனால் 8&ஆம் எண்ணில் பிறந்த மற்றவர்கள் தங்களது பிரச்சினைகளிலிருந்து
விடுபட முடியாமல் வாழ்க்கை முழுதும் தவிக்கின்றவர்களே. பெரும்பாலும் கொலை, களவு, கொள்ளை, கடத்தல், பொய்க்
கையெழுத்து (திஷீக்ஷீரீமீக்ஷீஹ்) விபச்சாரம், குடி, சூது, வரசம், நம்பிக்கைத்
துரோகம் போன்ற பல்வகை சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றார்கள். ஆனால்
மேற்கொள்ள துர்ப்பலன்களைக் கண்டு வாசகர்களே பயப்படவேண்டாம்! 8 ம் எண்காரர்களும்
அதிர்ஷ்டம் மிகுந்த வாழ்க்கை வாழ வேண்டுமெனில் தங்களது பெயரினை மிகவும் ஆராய்ந்து, நல்ல பெயர்
ஒலியிலும், பெயர் எண்ணிலும் வைத்துக் கொண்டால், தங்களது கெட்ட விதியினைக்கூட
மாற்றிவிட முடியும்! பல அன்பர்கள் பெயரை சீர்படுத்தி பலனடைந்துள்ளார்கள். எனவே
கவலைப்படவேண்டாம். அது மட்டுமன்று பிரபல சினிமா நட்சத்திரங்களும், பெருத்த
வியாபாரிகளும், மிராசுதார்களும்,
அதிகாரிகளும், கோடீசுவரர்களும்
8&ம் எண்ணில்தான் பிறந்துள்ளனர். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த
குருநானக், ஈ.வெ.ரா பெரியார்,
ஜார்ஜ் பெர்னாட்ஷா, ஜே.ஆர்.டி.
டாட்டா போன்றோரெல்லாம் இந்த எண்ணில் பிறந்து, வெற்றிகரமாக வாழந்தவர்கள்தான்.
தெய்வ நம்பிக்கை இவர்களிடம் தீவிரமாகவே உண்டு!
ஒன்று கடவுளே
இல்லை! என்று வாதிடுவார்கள். அல்லது கடவுளே கதி! என்று இறைவனை நம்புவார்கள்.
தங்கள் நல்லதென்று நினைத்து,
எடுத்துச் செய்கின்ற காரியங்களை
எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப்படாமல்
செய்து முடிக்கும் வலிமை இவர்களுக்கு உண்டு. ஓரளவு பிடிவாத குணம் நிறைந்தவர்கள்.
இவர்கள் மேற்பார்வைக்குக் கடின மனமும் பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சமூகத்தில்
பாதிக்கப்பட்டோரைக் கண்டால்,
அவர்களை ஆதரித்து
வாழ்க்கையளிக்கத் தயங்க மாட்டார்கள். பலாப்பழம் போன்ற குணமடையவர்கள்.
பொது சேவைக்கான
முயற்சிகள், எடுத்துக் கொண்டிருப்£ர்கள். தங்களது வாழ்க்கையிலும், எப்போதும்
உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். தங்களின் வசதிகளையும், பதவிகளையும், உறவினர்களையும்
திடீரென ஒருநாள் ஒதுக்கிவிட்டு,
மக்கள் சேவைக்கென ஓடிச்
செல்பவர்கள் இவர்கள்தான். தனிமனித வாழ்ககையானாலும், சமுதா வாழ்க்கையானாலும் எட்டாம்
எண்ணின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு விட்டால், பெரிய சோதனைகளை நிச்சயம் சந்திக்க
நேரிடும் என்றே எண்கணிதம் சொல்கிறது! சாகதத்திலும், எந்த ஒரு கிரகமும் 8ம்
இடத்தில்(இராசிக் சக்கரம்) இருந்தாலும் (சனியைத் தவிர) அல்து கோசாரத்தில் 8&ம் இடத்திற்கு வந்தாலும், அந்தச் சாதகர்கள், அந்தக்
கிரகத்தின் காரணத்தால் பல துன்பங்களை நிச்சயம் அடைவார்கள் என்று சோதிட சாத்திரம்
கூறுகிறது! 8&ம் எண்காரர்கள் பெரும் தத்துவ ஞானிகளாகவும், மனிதர்களுக்கு
வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் விளங்குகிறார்கள்.
No comments:
Post a Comment