Tuesday, 4 November 2014

எண் 9 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்

9
எண் 9 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் செவ்வாய் (Mars)
இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள் இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள். இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டு.
உடலும் சற்று முறுக்கேறி நிற்கும். நான்கு எண்காரர்களைப் போல் இவர்களுக்குக் கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும் நிறைந்திருக்கும். எனவே இவர்களுக்கு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எத்தொழிலிலும், பதவியிலும், நிர்வாகத்திலும் வல்லவர்கள். இவர்கள் ஓரளவு ஒல்லியானவர்களே! ஆண்களில் பெரும்பாலோர் மீசை வளர்ப்பதில் விருப்பம் உடையவர்கள். நாவன்மை மிகுந்தவர்கள். இவர்களில் அதிர்ஷ்டசாலிகள் மென்மேலும் அதிர்ஷ்டசாலிகளாகவும், துரதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த எண்காரர்களுக்கு உடலில் அடிக்கடி காயங்கள், விபத்துக்கள் போன்றவை ஏற்படும். ஆயினும் அதைக் கண்டு பயப்பட மாட்டார்கள். 9&ம் எண்ணில் பிறந்தவர்களின் பெயர்கள் 8&ம் எண்ணில் மட்டும் இருந்து விட்டால் தற்கொலை முயற்சிகளும், வாகனங்களால் விபத்து உண்டு. இந்தச் செவ்வாய்க் கிரக ஆதிக்கர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் லாரி, காளை மாண்டு வண்டிகள், குஸ்தி, நீச்சல் போட்டிகள், மிருகவேட்டை, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் மிகவும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.
சர்க்கஸ் விளையாட்டுக்களில் விருப்பமுடன் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். கார், சைக்கிள், லாரி, பஸ் ஆகியவற்றை மிகவும் வேகமாக ஓட்டுபவர்கள் இவர்கள் தான். இவர்கள் எதற்கும், எப்போதும் பயப்பட மாட்டார்கள்! மேலும் தங்களது நோக்கத்திற்காகக் கடுமையான உழைக்கவும் தயங்க மாட்டார்கள். இவர்கள் எப்போதும் அலைபாயும் மனத்தை உடையவர்களாக இருப்பார்கள். இறைவன் இவர்களின் மனத்தை அமைதியாக வைத்திருக்க அனுமதிப்பதில்லை போலும்! இவர்கள் நடப்பதில் மிகவும் பிரியமுடையவர்கள்! இவர்களுக்கு என்னதான் வசதியிருப்பினும் கால் தேய நடந்து செல்வதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும், தனியார் ஸ்தாபனங்களிலும் தலைமைப் பதவியில் இவர்கள் நன்கு புகழ் பெறுவார்கள். இவர்கள் உழைப்பதில் சுகம் காண்பார்கள். சோம்பலை இவர்கள் வெறுப்பவர்கள். ஊர் சுற்றுவதிலும் அலாதிப் பிரியம் உடையவர்கள். நடுரோட்டில் ஒரு நோஞ்சானை ரௌடி ஒருவன் தாக்கினால் அதைக் கண்டு பொறுக்காமல், அந்த முரடனுடன் தைரியமாகச் சென்று போராடுபவர்கள் இவர்கள்தான்.
சிறு வயதுகளில் மிகவும் சிரமப்பட்டாலும், தங்ளது மன உறுதியினாலும், விடா முயற்சியினாலும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறி விடுவார்கள். இவர்கள் சுதந்திரப் போக்கு உடையவர்கள்! அவசரக்காரர்கள்! உணர்ச்சி மயமானவர்கள்! பிடிவாத குணம் இயற்கையிலேயே உண்டு. ஆபத்து மிகுந்த தொழிலில் இறங்கி விடுவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்களின் சண்டைக் குணத்தால், குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்படும்.
தங்களை எல்லோரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு. எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள் கிடைத்தால்தான், இவர்கள் அவற்றில் மிகவும் தீவிரமாகவும், சிறப்பாகவும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்து முடிப்பார்கள். இல்லை என்றால் அவைகளை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள். பின்பு அந்தக் காரியங்கள் கெட்டழிந்தாலும்கூட அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள். இவர்களது திருமணம் இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள்.
தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும். சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

No comments:

Post a Comment