Friday, 7 November 2014

ஒரு ஊருல ரெண்டு ராஜா - திரை விமர்சனம்

ஒரு ஊருல ரெண்டு ராஜா - திரை விமர்சனம்


விமல் மற்றும் சூரி இணைந்த படங்கள் ஏற்கனவே நல்ல நகைச்சுவை படங்களாக அமைந்தது. ஒரு ஊருல ரெண்டு ராஜா மீண்டும் அந்த வரிசையில் சேர்ந்துகொண்டது, இம்முறை கொஞ்சம் அழுத்தமாக ஒரு கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நகைச்சுவையோடு போகிறது. இதில் பிரியா ஆனந்த் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம், தன் பங்கிற்கு சிறப்பாக செய்துள்ளார் பிரியா.
இயக்குனர் கண்ணன், மணி ரத்னத்தின் உதவியாளராகப் பணியாற்றியவர், அதனால் கதையும் கிளாஸ் ஆக வந்துள்ளது. படம் துத்துக்குடியில் தொடங்கி பயணத்தில் தொடர்ந்து பயணமாகவே மற்றும் நகைச்சுவையாக போகிறது.
மேலும் “ கண்ணா லட்டு தின்ன ஆசையா “ புகழ் விசாகா ஒரு சிறிய மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நிறைவாக வந்து போயிருக்கிறார்.
கதை

அழகு (விமல்) மற்றும் மைக் (சூரி) பிரியா (பிரியா ஆனந்த்) ஆகியோர் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். விமல் ப்ரியாவை ஒரு கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுகிறார். பிரியா கொலை முயற்சிக்கான காரணத்தை விமலிடம் சொல்கிறார். இப்போது விமலும் சூரியும் ப்ரியாவிற்கு உதவி செய்கிறார்கள். வில்லனாக நாசர் சிறப்பாக செய்துள்ளார். டி.இமான் படத்தின் இனோரு பலம் ஒளிப்பதிவாளர் முத்தையா அட்டகாசம் செய்துள்ளார்.  இறுதியில் மூவரும் வேலையை முடித்தார்களா என்பதை நகைச்சுவையோடு சொல்லிய கதை இந்த ஒரு ஊருல ரெண்டு ராஜா. விமலுக்கு இந்த படமும் வசூல் ராஜாதான். 

No comments:

Post a Comment