Thursday, 25 December 2014

கயல் திரைப்படம் விமர்சனம்

பத்து வருடங்களுக்கு முன்பு வந்த சுனாமியால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட இடங்களை கடந்து செல்லும்போது இன்னும் சிலருக்கு அந்த வலி மனதில் இருந்துகொண்டேயிருக்கும். அந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் கதையை கருவாக வைத்து பிரபு சாலமன் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
மைனா, கும்கி என்று எதிர்பார்த்துக் கொண்டு தயவுசெய்து செல்லவேண்டாம் ஏமாற்றம்தான் மிஞ்சும். சுனாமியால் பிரிந்த காதல் ஜோடிகளை பற்றிய கதைதான் இந்த கயல். பிறகு ஒன்றாக சேர்ந்தார்களா என்ன ஆனார்கள் என்பது மீதிக்கதை.
புதும்கங்கள் சந்திரன், வின்சென்ட் மற்றும் ஆனந்தி முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். ஆனந்தி நிச்சியமாக தமிழ் சினிமாவிற்கு நல்வரவு என்றால் அது மிகையாகாது ஆனால் இவர் ஏற்கனவே பொறியாளன் என்ற படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் ஓடவில்லை.

டி.இமானின் பாடல்கள் சற்று முனுமுனுக்கத்தான் வைக்கிறது ஆனால் பின்னணி இசையில் நன்றாக செய்துள்ளார். ஒளிப்பதிவில் வெற்றிவேல் மகேந்திரன் மிரட்டியிருக்கிறார். திரைக்கதையை சற்று வேகமாக நகர்த்தியிருக்கலாம் சற்று தோய்வாகதான் போகிறது.

பொறுறுறு...மையாக பார்த்தால் உங்கள் மனதில் நிறைந்து நிரப்பாள் இந்த கயல். 

கப்பல் விமர்சனம்
மீகாமன் விமர்சனம்
வெள்ளைக்காரத்துறை விமர்சனம்


No comments:

Post a Comment