வட்டிக்கு பணம் வாங்கி சூரியும் விக்ரம்
பிரபுவும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய ப்ரோக்கர் வையாபுரி மூலமாக ஒரு நிலத்தை
வாங்குகிறார்கள் ஆனால் அது சுடுகாடு நிலமாக இருக்கிறது.
இதனால் பணத்தை திருப்பித் தரமுடியாமல் போவதால்
அடிமையாக இருக்கவேண்டி வருகிறது, இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா மேல் விக்ரம்
பிரபுவிற்கு காதல் வருகிறது பிறகு ஸ்ரீதிவ்யாவிற்கும் காதல் வருகிறது.
ஒரு சமயத்தில் தன் காதலி ஸ்ரீதிவ்யவிற்கும்,
ஜான் விஜய்க்கும் திருமண ஏற்ப்பாடு ஆகிறது. விக்ரம் பிரபு தன் திருமணத்தை நிறுத்தி
காதலிவுடன் சேர்ந்தாரா இல்லையா என்பதுதான் மொத்தக்கதை.
விக்ரம் பிரபுவிற்கு ஓரளவுக்கு நகைச்சுவை
வருகிறது, ஸ்ரீதிவ்யா கிராமத்து பெண் வேடத்தில் வழக்கம்போல் மனதை கவருகிறார்.
சூரியும் வழக்கம் போல கிச்சுகிச்சு மூட்டுகிறார். ஓரளவுக்கு சிரிப்பு வருகிறது.
ஜான் விஜய் வில்லன் மாற்றும் நகைச்சுவையில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
தேசிங்கு ராஜாவில் பயன்படுத்திய அதே மசாலாதான்
எழில் தந்திருக்கிறார், ஓரளவுக்கு நன்றாகவே வேளை செய்திருக்கிறது. டி.இமானின்
பாடல்கள் சுமார்தான். ஒளிப்பதிவு நன்றாக செய்துள்ளார் நல்லுசாமி.
நகைச்சுவையில் சுமாரான “வெள்ளைக்காரத்துறை”...
No comments:
Post a Comment