'லிங்கா' படத்தின்
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் அமீர், ரஜினி
அரசியலுக்கு வரவேண்டும் என்றார். தொடர்ந்து இது தொடர்பாக அவர் அளித்த ஒரு
பேட்டியில், "ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என நான்
விரும்புகிறேன். அவரது பிறந்த நாள் டிசம்பர் 12ம் தேதி
வருகிறது. அப்போது அவர் இதை தெளிவுபடுத்த வேண்டும்.
அப்படி செய்யாமல் தொடர்ந்து
சர்ச்சையை மட்டுமே வளர்த்து தன் படத்தை வியாபாரம் செய்யப் பார்க்கிறார் என்றால்
இதைவிட ஒரு பெரிய துரோகத்தை தமிழக மக்களுக்கு அவர் செய்துவிட முடியாது" என முரண்பாடான
கருத்தை சொன்னார்.
இது பற்றி அறிந்ததும் ரஜினி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. ரஜினியை பாராட்டுவதுபோல் பாராட்டிவிட்டு, இப்படியெல்லாம் கருத்து சொல்லியிருக்கிறாரே என ரஜினிக்கு நெருங்கிய வட்டத்தில் கோபப்படுகிறார்களாம். அமீரின் இந்த கருத்தால் அதிகம் கொதிப்படைந்து இருப்பது ரஜினியின் ரசிகர்கள்தான்.

'சர்ச்சையை
வளர்க்கிறார், துரோகம் செய்கிறார் என்றெல்லாம் தலைவரை பற்றி அந்த
ஆளு எப்படி பேசலாம்' என ரஜினி ரசிகர் மன்ற அலுவலகங்களில்
உஷ்ணம் பரவியிருக்கிறதாம். அமீர் வீடு முன் போராடுவது என்று கூட சில ரசிகர்கள்
முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. ரஜினி தரப்பிலிருந்து அமைதி காக்குமாறு தகவல்
போனதால் ரசிகர்கள் வேறு வழியின்றி தவிக்கிறார்களாம். ஆனால் டுவிட்டர், பேஸ்புக்கில்
அமீரை காய்ச்சி எடுத்து வருகிறார்களாம் ரசிகர்கள். மாற்றி மாற்றி பேசுவது சினிமா
காரர்களுக்கு புதிது இல்லையே.
No comments:
Post a Comment