இளையதளபதி விஜய் முதன் முதலாக நடித்த “நாளைய தீர்ப்பு” இதே டிசம்பர்
நான்காம் தேதிதான் வெளிவந்தது. அதாவது இருபத்தி இரண்டு வருடங்கள் ஆகிறது, அன்று
முதல் இன்றுவரை தன் கடும் உழைப்பால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு அதிக
வசூல் கொடுக்கும் நாயகனாக நம் இளையதளபதி விஜய் நிமிர்ந்து நிற்கிறார்.
இவர் தந்தையின் பலத்தால் தான் சினிமாவில் இருக்கிறார் என்று இவருக்கு
எதிர்கருத்து உண்டு. என்னதான் எல்லாரும் விஜயை ஏற்றிவிட்டலும், திறமை
இல்லாவிட்டால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்பதுதான் உண்மை.
நாளைய தீர்ப்பு படத்தில் நடிக்கும்போது ஒரு குறிபிட்ட நாளிதழ் இவரை
தேவாங்கு போல் இருக்கிறார் என்று விமர்சனம் செய்ததது. அதே பத்திரிகை இவருக்கு
அடுத்த “சூப்பர்ஸ்டார்” பட்டம் கொடுக்கிறோம் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று
கெஞ்சும் நிலைக்கு இன்று உயர்ந்து நிற்கிறார். திறமை இல்லாமல் இது சாத்தியமே
இல்லை. இன்றைய சூழ்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறகு அதிக வசூல் தரும் நடிகர்
மற்றும் அரசியலிலும் ரஜினிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர் “இளையதளபதி”
விஜய் என்றால் அதில் மாற்று கருத்து இல்லை.
இந்த நன்னாளில் OnlineArasan குழு
சார்பில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறிகொள்வதில் பெருமையடைகிறோம்.
No comments:
Post a Comment