(Image WikiHow)
கண்களுக்கு கீழே கரு வளையம்
வந்தால் பெண்கள் படும் வருத்தம் கொஞ்சம் அதிகம்தான், சரி அதற்க்கான காரணங்கள்
மற்றும் தீர்வுகள் இதோ...
தூக்கமின்மை, போதியளவு ஓய்வு இல்லாமல்
இருத்தல், கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன், இரவில் வேலை
பார்த்தால் போன்ற காரணங்களால் கண்களின் கீழ் கருவளையம் ஏற்படுகின்றது.
இந்த பிரச்சினை இருப்பார்கள் இரும்புச்
சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கரட், பீட்ரூட் பழ ஜீஸ்கள், கீரை வகைகள், பப்பாளி, மாம்பழம் போன்றவற்றை உணவில்
அதிகமாகவே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், உப்புக்கலக்காத எண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் எடுத்து கண்களின்
உள்ளே போய்விடாதபடி சுண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும்.
கற்றாழையின் சோற்றுப்பகுதியை
பன்னீருடன்
கலந்து கண்களுக்கடியில் தடவி 10 நிமிடத்துக்கு பிறகு கழுவிவர படிப்படியாக குறையும்.
விளக்கெண்ணைய்யை கண்களின் மீது
தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் நல்ல முனேற்றம் தெரியும்.
No comments:
Post a Comment