கார்த்தியுடன் 'கொம்பன்' படத்தில் நடித்துவரும் லட்சுமி மேனன், பிரசாந்தின் 'சாஹசம்' படத்துக்காக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார். தமன் இசையில், மதன் கார்க்கி எழுதிய பாடலை லட்சுமி மேனன் பாடிய விதம், தொழில்முறை பாடகர்களுக்கு நிகராக வந்துள்ளதாம்.
தியாகராஜன் தயாரிப்பில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அருண் ராஜ் வர்மா எனும் புதுமுக இயக்குநர் இயக்குகிறார். லட்சுமி ஏற்கெனவே 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தின் இமான் இசையில், ஏக்நாத் எழுதி, லட்சுமி மேனன் பாடிய பாடல் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment